தடுப்பூசி, கிருமித்தொற்று, பாதுகாப்பு: வல்லுநர் விளக்கம்

தடுப்பூசி, கிருமித்தொற்று, பாதுகாப்பு: வல்லுநர் விளக்கம்

3 mins read
d0335176-a891-4cbf-8074-54ac33d20f45
(இடமிருந்து) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூத்த சுகாதாரத் துறை செய்தியாளர் சல்மா காலிக், பேராசிரியர் ஊய் எங் யோங், தேசிய தொற்றுநோய் நிலைய நிர்வாக இயக்குநர் லியோ யீ சின், இணைப் பேராசிரியர் சூ லி யாங் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஒரு­வருக்குத் தொற்று ஏற்­பட்­டா­லும் உடல்­நிலை பாதிக்­கப்­ப­டா­மல் இருந்­தால் அது தலை­சி­றந்த பாது­காப்­பாக இருக்­கும்.

அத்­த­கைய ஒரு­வர், கொவிட்-19 கிருமி எப்­படி உரு­மாறி வந்­தா­லும் அதற்கு எதி­ராக தன்­னைப் பாது­காத்­துக்­கொள்ள முடி­யும் என்று டியுக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யின் பேரா­சி­ரி­யர் ஊய் எங் யோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஒரு­வ­ருக்குத் தொற்று இருந்­தும் அறி­கு­றி­கள் எது­வும் இல்லை என்­றால் அவ­ரின் உட­லில் அதிக மீள்­தி­றன் இருப்பதாக பொருள் என்று அவர் நேற்று இணை­யக் கருத்­த­ரங்­கில் தெரி­வித்­தார்.

'கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழ்க்கை: எப்­போது, எப்­படி?' என்ற தலைப்­பில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்­பாட்­டில் நேற்று அந்­தக் கருத்­தரங்கு நடந்­தது.

ஒரு­வ­ரின் உட­லில் கிருமி புகும்­போது கிருமியின் புறத்தே உள்ள புர­தப்­பொ­ருட்­களை அடை­யா­ளம் தெரிந்­து­கொள்­வது எப்­படி என்­பதை இப்­போ­தைய தடுப்­பூ­சி­கள் நம் உட­லுக்குப் போதிக்­கின்­றன.

இருந்­தா­லும் கிருமி உரு­மா­றும்­போது அத­னு­டைய புறத்­தோற்­றம் மாறு­தல் அடை­யக்­கூ­டும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வருக்­குத் தொற்று ஏற்­ப­டும்­போது, கிரு­மி­யின் அனைத்துப் பகு­தி­களை­யும் பற்றி நம்­மு­டைய உடல் நன்கு தெரிந்­து­கொள்ள வழி பிறக்­கிறது.

இத­னால் கிருமி எப்­படி உரு­மாறி வந்து தாக்­கி­னா­லும் அதற்கு எதி­ரான பாது­காப்பு உட­லில் ஏற்­படு­கிறது என்று பேரா­சி­ரி­யர் ஊய் விளக்­கி­னார்.

ஒரு­வர் உட­லில் எந்த அளவுக்குக் கிருமி எதிர்ப்பு புர­தப்­பொருள் இருக்­கி­றதோ அந்த அளவுக்­குச் சிறந்த முறை­யில் அவருக்குப் பாது­காப்பு இருக்­கும் என்று சிங்­கப்­பூர் தேசிய தொற்­று­நோய் நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் லியோ யீ சின் கூறி­யதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இருந்­தா­லும் நோய் எதிர்ப்பு புர­தப்­பொ­ருட்­கள் எப்­போ­துமே உடலில் நிரந்­த­ர­மாக இருந்து வரு­வ­தில்லை என்­பதை அவர் சுட்­டி­னார்.

ஒரு­வ­ரின் உட­லில் இருக்­கக்­கூ­டிய நோய்த் தடுப்­பாற்­றல், தேவை இல்லை எனில் நோய் எதிர்ப்பு புரதப்­பொ­ருட்­களை அதி­க­ள­வில் வைத்­தி­ருப்­ப­தில்லை என்று பேராசிரியர் ஊய் கூறினார்.

இருந்­தா­லும் அத்­த­கைய புர­தப் பொருட்­களை எப்­படி உரு­வாக்­கு­வது என்­பது நோய் தடுப்­பாற்­ற­லுக்­குத் தெரி­யும். மீண்­டும் கிருமி உடலில் புகும்­போது உட­ன­டி­யாக கிருமி எதிர்ப்பு புர­தப்­பொ­ருட்­களை உரு­வாக்கி உட­லைப் பாது­காக்க நோய்த் தடுப்­பாற்­றல் முய­லும். இதற்குச் சில நாட்­கள் பிடிக்­கும்.

இந்த நிலை­யில், கிருமி உட­லின் உள்ளே புகு­வ­தற்கு வேக­மாக முய­லும். அதை ஒழிக்க உட­லின் நோய் எதிர்ப்­பாற்­றல் மும்­மு­ர­மா­கச் செயல்­படும். இரண்­டுக்கும் இடை யில் போட்­டா­போட்டி நிலை ஏற்­படும் என்று அவர் கூறினார்.

தொடக்­கத்­தில் தலை­காட்­டிய கிருமி பாதிப்­பு­க­ளை­விட டெல்டா உரு­மா­றிய கிருமி அதி­கம் பேரை பாதித்து இருக்­கிறது என்­பது இன்று­வரைப்பட்ட தக­வல்கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது என்­ப­தை­யும் பேரா­சி­ரி­யர் சுட்­டி­னார்.

கிருமி நம்­மு­டைய உட­லில் உள்ள உயி­ர­ணுக்­களில் நுழைந்து இனப்­பெ­ருக்­கத்­தில் ஈடு­ப­டு­வதை நோய் எதிர்ப்புப் புர­தப்­பொ­ருட்­கள் தடுக்­கின்­றன.

ஆனால் கிருமி உயி­ர­ணு­வின் உள்ளே புகுந்­து­விட்­டால், அந்­தப் புர­தப்­பொ­ருட்­கள் செய­லி­ழந்­து­விடும். இருந்­தா­லும் உட­லில் இருக்­கும் வெள்ளை அணுக்­கள் பாதிக்­கப்­பட்ட உயி­ர­ணுக்­களை, கிருமி மேலும் பர­வா­மல் தடுக்­கும் வகை­யில் கொன்­று­விட முய­லும்.

ஆனா­லும் கோடிக்­க­ணக்­கான கிரு­மி­கள் உயி­ர­ணுக்­களுக்­குள் பல்­கிப் பெரு­கும்.

கிரு­மி­யின் வெளிப்­பக்­கம் இருக்­கும் புர­தப்­பொ­ருட்­க­ளைத் தெரிந்து­கொள்ள வெள்ளை அணுக்­க­ளுக்கு இப்­போ­தைய தடுப்­பூ­சி­கள் பயிற்சி அளிக்­கின்­றன.

ஆனால் கிருமி உரு­மாறி அத­னால் கிருமியின் வெளிப்­புற புர­தப்­பொ­ருள் மாற்­ற­ம­டை­யும்­போது அந்­தக் கிரு­மியை எதிர்த்­துப் போராடு­வ­தில் வெள்ளை அணுக்­களின் பலம் குறைந்­து­வி­டும் என்று பேராசிரியர் ஊய் தெரிவித்தார்.