எல்லா தாதிமை விடுதிகளுக்கும் கருவி

எல்லா தாதிமை விடுதிகளுக்கும் கருவி

1 mins read

சிங்­கப்­பூ­ரில் உள்ள எல்லா தாதிமை விடு­தி­களும் அடுத்த வாரத்­தில் விரை­வுப் பரி­சோ­த­னைக் கருவியைப் பெறும். தாதிமை விடுதி­களில் உள்­ள­வர்­கள், ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் அடிக்­கடி கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் நடப்­ப­தற்கு ஏது­வாக அந்­தக் கருவி விநி­யோ­கிக்­கப்­படும்.

பரி­சோ­த­னை­கள் முடுக்­கி­விடப்­படு­வ­தால், தொற்று முன்­ன­தா­கவே கண்­ட­றி­யப்­பட்டு அதைத் தடுக்க வழி ஏற்­படும் என்று 'ஒருங்­கிணைந்த பரா­ம­ரிப்பு முகவை' என்ற அமைப்பு வியா­ழக்­கி­ழமை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

நான்கு தாதிமை விடு­தி­களில் கொவிட்-19 தொற்­றுக் குழு­மங்­கள் தலை­காட்டி இருக்­கின்­றன. அவற்­றில் ஒன்­றான ஆரஞ்ச் வேலி தாதிமை விடுதி தொற்­றுக் குழு­மத்­தில் 14 பேர் பாதிக்­கப்­பட்டனர்.

புக்­கிட் பாத்­தோக்­கில் இருக்­கும் ரென் சி விடுதி குழு­மத்­தில் 34 பேரும் வெஸ்ட் கோஸ்ட்­டில் இருக்­கும் ஜாமியா விடு­தி­யில் 13 பேரும் ஜூரோங் ஈஸ்ட்­டில் இருக்­கும் ஆல் செயின்ட்ஸ் விடு­தி­யில் 12 பேரும் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்­பது நேற்று தெரி­ய­வந்­தது.