தொற்று: சிறாருக்கு கடும் பாதிப்பு இல்லை

தொற்று: சிறாருக்கு கடும் பாதிப்பு இல்லை

1 mins read

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக சிறார் யாரும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­ட­வில்லை. இங்கு 12க்கும் குறைந்த வய­துள்ள சிறார்­களி­டையே 367 பேருக்குக் கிருமி தொற்­று ஏற்பட்டது.

இந்த விகி­தம், மொத்­தம் கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்­கை­யில் 0.6% என்­பதை நாடா­ளு­மன்­றத்­தில் செவ்­வாய் அன்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி தெரிவித்தார்.

சிறார்களில் ஒரு­வ­ருக்­குக் கூட கடு­மை­யான பாதிப்­பு­கள் இல்லை என்­பதை அவர் சுட்­டி­னார்.

இத­னி­டையே, தடுப்­பூசி செயல்­திட்­டத்தை நல்ல முறை­யில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரும் டென்­மார்க்­கில் தொற்று அதி­க­மாக இருப்­பதைக் குறிப்­பிட்டு அந்த நாட்­டின் சூழ்­நி­லையை, சிங்­கப்­பூர் நினைத்­துப் பார்க்­க­லாம் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

டென்­மார்க்­கில் ஒன்­பது மற்­றும் அதற்­கும் குறைந்த வய­துள்ள சிறார்­க­ளி­டையே தொற்று ஏற்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஏறத்­தாழ 28,000 ஆக இருக்­கிறது. அந்­தச் சிறார்­களில் இரண்டு பேர் மாண்டு­விட்­டார்­கள்.