நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம், மன அமைதி

நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம், மன அமைதி

3 mins read

கொரோனா கிரு­மி­யின் பாதிப்பு ஒரு­வ­ரது உடல் நோய் எதிர்ப்பு சக்­தியை பொறுத்தே அமை­கிறது. கிரு­மிப் பாதிப்­பி­லி­ருந்து தற்­காக்க, பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளு­டன் உட­லின் நோய் எதிர்ப்பு சக்­தியை வளர்ப்­ப­தும் முக்­கி­யம்.

நோய் எதிர்ப்­பாற்­ற­லா­னது பாக்­டீ­ரியா, வைரஸ், ஒட்­டுண்­ணி­கள், தொற்று நோய்­க­ளுக்கு எதி­ராக போராட உத­வு­கின்­றன. பிறப்­பி­லேயே உரு­வா­கும் நோய் எதிர்ப்பு சக்தி, வள­ரும்­போது பெறப்­படும் நோய் எதிர்ப்பு சக்தி, குழந்­தைப் பரு­வத்­தில் போடப்­படும் தடுப்­பூ­சி­க­ளான நோய்த் தடுப்பு மருந்­து­க­ளால் ஏற்­படும் எதிர்ப்பு சக்தி, ஆண்­டு­தோ­றும் போட்­டுக்­கொள்­ளும் தடுப்­பூசி மூலம் பெறப்­படும் நோய் எதிர்ப்பு சக்தி முத­லிய வழி­களில் உடல் நோய் எதிர்ப்­பாற்­ற­லைப் பெறு­கிறது. இந்த செயல்­மு­றைக்கு உணவு பெரி­தும் உத­வு­கிறது.

​நோய் எதிர்ப்­பாற்­றலை அதி­க­ரிக்­கும் உண­வு­கள்

 தானி­யம், விதை­கள், பருப்­பு­கள் போன்­றவை இயற்­கை­யா­கவே உட­லில் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க உத­வு­கின்­றன. பாதாம், அக்­ரூட் பருப்­பு­கள், ஆளி விதை போன்­றவை புர­த­மும் இரும்பு சத்­தும் நிறைந்­தவை. உட­லில் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க இவை அவ­சி­ய­மா­ன­தாக உள்­ளன.

​ நோய் எதிர்ப்­பாற்­றலை அதி­க­ரிக்க இஞ்சி, லவங்­கப்­பட்டை, ஏலக்­காய், மிளகு, தேநீர் போன்ற பானங்­கள் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மூலிகை தேநீ­ரில் உள்ள பாக்­டீ­ரியா எதிர்ப்­பும் ஆக்­ஸி­ஜ­னேற்ற பண்­பு­களும் நோயெ­திர்ப்பு சக்­தியை வலுப்­ப­டுத்த உத­வு­கின்­றன.

 மஞ்­சள், தேன் கலந்த பால் இரண்­டும் ஆண்­டி­ஜென், பாக்­டீ­ரியா எதிர்ப்பு பண்­பு­களை கொண்­டுள்­ளன. மன அழுத்­தத்தை குறைக்­க­வும் இவை உத­வு­கின்­றன.

 பூண்டு, சூடான சூப்­ போன்ற வை­யும் உட­லுக்கு உகந்தவை.

 நாள் முழு­வ­தும் எப்­போ­தும் நீரேற்­ற­மாக இருப்­பது முக்­கி­ய­மா­கும். மருத்­து­வர்­கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்­டர் நீர் குடிக்­கு­மாறு பரிந்­து­ரைக்­கின்­ற­னர். உடல் நச்­சுக்­களை வெளி­யேற்ற தண்­ணீர் உத­வு­கிறது.

 வைட்­ட­மின் சி நிறைந்த உண­வு­களை உண்­ண­லாம். நெல்­லிக்­காய் 'வைட்­ட­மின் சி' நிறைந்த ஒன்று. நோய் எதிர்ப்பு சக்­தி­யை­யும் வளர்­சிதை மாற்­றத்­தை­யும் அதி­க­ரிக்க உத­வு­வ­தோடு, குளிர் கார­ண­மாக ஏற்­படும் வைரஸ் நோய்­களை தடுக்­க­வும் இது உத­வு­கிறது.

 நோயெ­திர்ப்பு மண்­ட­லத்­தில் உயிர் வேதி­யி­யல் எதிர்­வி­னை­களை வலுப்­ப­டுத்த வைட்­ட­மின் பி 6 உண­வு­கள் முக்­கி­ய­மா­கும். இது நரம்பு மண்­ட­லத்தை ஆரோக்­கி­ய­மாக பாதுக்­காக்க உத­வு­கிறது. ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி, சோயா பீன்ஸ், சமைத்த முட்டை போன்ற உண­வு­களில் வைட்­ட­மின் பி6 அதி­கம் உள்­ளது.

 'வைட்­ட­மின் ஈ' சக்தி வாய்ந்த ஆக்­ஸி­ஜ­னேற்­றி­யா­கும். இது உட­லில் தொற்­று­நோய்­களை எதிர்த்து போராட உத­வு­கிறது. இந்த உயிர்ச்­சத்­துள்ள உண­வு­களை அதி­கம் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

வாழ்க்கை முறை மாற்­றங்­கள்

உட­லில் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க வாழ்க்கை முறை மாற்­றங்­க­ளும் மிகவும் உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

 யோகா பயிற்­சி­கள் சுவா­சத்தை மேம்­ப­டுத்­த­வும் சீராக்­க­வும் உத­வு­கிறது. இத­னால் நுரை­யீ­ரல் விரி­வ­டை­கிறது. தசை­க­ளின் ஆரோக்­கி­யத்­திற்­கும் யோகா முறை உத­வு­கிறது.

 ஆழ்ந்த தூக்­க­மும் ஓய்­வும் மிக முக்­கி­யம். தூங்­கு­வ­தற்கு இரண்டு மணி நேரத்­துக்கு முன்­ன­தாக இர­வு­ உணவை உண்­பது, மின்­னி­யல் சாத­னங்­க­ளை­யும் கைபே­சி­யை­யும் அடைத்­து­வைத்து விடு­வ­தும் நல்ல ஆழ்ந்த தூக்­கத்­துக்கு உத­வும். புத்­த­கம் வாசிப்­பது, இசை கேட்­பது போன்­றவை தூக்­கத்தை இத­மாக்­கும்.

 படுக்­கச் செல்­லும் முன்­னர் மன­தி­லுள்ள கவ­லை­கள், பிரச்­சி­னை­கள், கோப­தா­பங்­களை ஒதுக்­கி­வைத்து விட்டு, அமை­தி­யாக தூங்­கு­வது மிக முக்­கி­யம். இத்­த­கைய செயல்­மு­றை­கள் உடல் உறுப்­பு­க­ளை­யும் மூளைச் செயல்­பாட்­டை­யும் அமை­திப்­ப­டுத்தி, நல்ல தூக்­கத்­தைத் தரும்.

உடல் தன்­னைச் சீர்­ப­டுத்­திக்­கொள்­ள­வும், இழந்த உயி­ர­ணுக்­களை மீண்­டும் உற்­பத்தி செய்­ய­வும் சில மணி நேர ஆழ்ந்த தூக்­கம் முக்­கி­ய­மா­னது.