டோனி: பொறுப்பை உணர்ந்த அணியினர்

டோனி: பொறுப்பை உணர்ந்த அணியினர்

2 mins read
6843dcaa-e4a0-482c-bbb1-5fff07d58a57
சென்னை அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ருதுராஜ் கெய்க்வாட். படம்: பிசிசிஐ -
multi-img1 of 2

ஷார்ஜா: நடப்பு இந்­திய பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) டி20 கிரிக்­கெட் தொட­ரில் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யின் சிறந்த செயல்­பாட்­டிற்கு வீரர்­க­ளின் கடும் உழைப்­பும் அவர்­கள் தங்­க­ளது பங்­கை­யும் பொறுப்­பை­யும் உணர்ந்­துள்­ள­துமே கார­ணம் என்று அவ்­வ­ணி­யின் தலை­வர் மகேந்­திர சிங் டோனி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடந்த போட்­டி­யில் சென்னை அணி நான்கு விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் விராத் கோஹ்லி தலை­மை­யி­லான ராயல் சேலஞ்­சர்ஸ் பெங்­க­ளூரு அணி­யைத் தோற்­க­டித்­தது.

இத­னை­ய­டுத்து, சென்னை அணி 14 புள்­ளி­க­ளு­டன் மீண்­டும் பட்­டி­ய­லின் முத­லி­டத்­திற்கு முன்­னே­றி­யது.

முத­லில் பந்­த­டித்த பெங்­க­ளூரு அணி­யின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளான கோஹ்­லி­யும் தேவ்­தத் படிக்­கல்­லும் அரை­ச­தம் அடித்து, அரு­மை­யான அடித்­த­ளம் அமைத்­துத் தந்­த­னர். ஆயி­னும், இன்­னிங்­சின் பிற்­பா­தி­யில் சென்னை அணி­யி­னர் கட்­டுக்­கோப்­பா­கப் பந்­து­வீசி, விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­ய­தோடு, ஓட்ட வேகத்­தை­யும் கட்­டுப்­ப­டுத்­தி­னர்.

இத­னால், பெங்­க­ளூரு அணி 20 ஓவர்­களில் ஆறு விக்­கெட் இழப்­பிற்கு 156 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது. சென்னை அணித் தரப்­பில் டுவைன் பிராவோ அரு­மை­யா­கப் பந்­து­வீசி, 24 ஓட்­டங்­களை மட்­டும் விட்­டுத் தந்து, மூன்று விக்­கெட்­டு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

இலக்கை விரட்­டிய சென்னை அணி­யில் டு பிளஸ்ஸி (31), ருது­ராஜ் கெய்க்­வாட் (38), மொயீன் அலி (23), அம்­பதி ராயுடு (32) ஆகிய முன்­வ­ரிசை ஆட்­டக்­கா­ரர்­கள் தங்­க­ளது பங்­க­ளிப்­பைச் செவ்­வனே ஆற்­றி­னர். இத­னால், 11 பந்­து­கள் எஞ்­சி­யி­ருந்த நிலை­யில் சென்னை அணி வெற்­றி­யைச் சுவைத்­தது.

சென்னை அணியில் நீண்டகாலமாகத் தம்முடன் இணைந்து விளையாடி வரும் பிராவோவைத் 'தமது சகோதரர்' எனக் குறிப்பிட்டார் டோனி.

"பிராவோ உடற்­த­கு­தி­யு­டன் இருப்­பது நல்ல விஷ­யம். அவர் 'ஸ்லோ பால்' வீச வேண்­டுமா என்­ப­தில் எங்­க­ளுக்­குள் சண்டை வரும். ஆனால், தம்­மால் முடி­யும்­போ­தெல்­லாம் அவர் பொறுப்­பேற்­றுக்­கொள்­வார்," என்று டோனி மெச்சினார்.

ஏமாற்றமளித்த சிங்கப்பூர் வீரர்

இத­னி­டையே, ஐபி­எல் போட்­டி­களில் பங்­கேற்ற முதல் சிங்­கப்­பூர் ஆட்­டக்­கா­ரர் என்ற பெரு­மை­யைப் பெற்­றார் 25 வய­தான டிம் டேவிட் (படம்). நடு­வ­ரிசை பந்­த­டிப்­பா­ளர், வலக்கை சுழற்­பந்து வீச்­சா­ளர் என ஆல்­ர­வுண்­ட­ராக விளங்­கும் இவரை பெங்­க­ளூரு அணி வாங்­கி­யுள்­ளது. முதன்­மு­த­லாக நேற்று முன்­தினம் சென்னை அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்­தில் களம் கண்ட இவர், மூன்று பந்­து­களை எதிர்­கொண்டு ஓர் ஓட்­டம் மட்­டும் எடுத்து, தீபக் சாகர் பந்­து­வீச்­சில் ஆட்­ட­மி­ழந்­தார். பந்­து­வீச இவ­ருக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.