சிங்கப்பூர் பிரிமியர் லீக்: 23 வயதிற்குக் கீழ் ஒருவரை மட்டும் களமிறக்கலாம்

2 mins read

இளையர் மேம்பாட்டில் அக்கறை செலுத்தும் குழுக்களுக்கு வெகுமதி

அடுத்த ஆண்­டில் இருந்து சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் காற்­பந்து ஆட்­டங்­க­ளின் முற்­பா­தி­யில் 23 வய­திற்­கு­ட்பட்ட ஒரு வீரரை மட்­டுமே கள­மி­றக்க முடி­யும். இப்­போது அந்த வரம்பு மூன்­றாக இருக்­கிறது.

அதே வேளை­யில், ஒரு குழு­வில் 23 வய­திற்­குட்­பட்ட வீரர்­கள் எத்­தனை பேர் வேண்­டு­மா­னா­லும் பதி­வு­செய்­தி­ருக்­க­லாம்.

அத்­து­டன், இளை­யர் மேம்­பாட்­டில் கவ­னம் செலுத்­தும் குழுக்­களுக்கு பண வெகு­மதி வழங்­கும் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

நேற்று நடந்த மெய்­நி­கர் கூட்­டத்­தில் சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கத்­தின் தலை­வர் லிம் கியா டோங் இவற்றை அறி­வித்­தார்.

"எங்­க­ளது காற்­பந்­துத் திட்­டங்­களில் இளை­யர் மேம்­பாட்­டில் கவ­னம் செலுத்­து­வது ஒருங்­கி­ணைந்த அங்­க­மாக நீடிக்­கும். அதே நேரத்­தில், நமது தொழில்­மு­றைக் காற்­பந்­துக் குழுக்­கள் வட்­டார அள­வி­லும் அனைத்­து­லக அள­வி­லும் போட்­டித்­தன்­மை­யு­டன் இருக்க வேண்­டி­ய­தும் அவ­சி­யம்.

"விதி­மாற்­றம் வீரர்­கள் தேர்­வில் அதிக நீக்­குப்­போக்­கை­யும் 23 வய­திற்கு மேற்­பட்ட வீரர்­கள் கூடு­தல் நேரம் விளை­யா­டும் வாய்ப்­பை­யும் அளிக்­கும். இதன்­மூ­லம் லீக் போட்டி­களில் வீரர்­கள் தங்­க­ளது ஆட்­டத்­தி­றனை வெளிப்­ப­டுத்­த­வும் அதிக வாய்ப்பு கிட்­டும்," என்று திரு லிம் கூறி­னார்.

உள்­ளூ­ரில் அதி­க­ள­வில் இளம் வீரர்­களை உரு­வாக்­கும் நோக்­கில் இந்த விதி 2018ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு வர­வேற்­பும் இருந்­தது, எதிர்ப்­பும் கிளம்­பி­யது.

விதி­யில் மாற்­றம் இடம்­பெ­ற­லாம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த மாதமே செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. அப்­போது, தேசிய அணி­யின் பயிற்­று­விப்­பா­ளர் டட்­சுமா யோஷிடா இந்த விதி­மாற்­றத்தை வர­வேற்­றுள்­ளார்.

"அந்த விதி தேசிய அணி­யின் வளர்ச்­சிக்கு நல்­ல­தல்ல. ஏனெ­னில், போதிய திறமை இல்­லா­த­போ­தும் 23 வயதிற்குட்பட்ட மூவ­ரைக் கள­மி­றக்­கி­யாக வேண்­டும். இத­னால் மூத்த வீரர்கள் அதிக நேரம் விளை­யா­டும் வாய்ப்பை இழக்­க­லாம்," என்று அவர் கூறியி­ருந்­தார்.