பார்சிலோனா பயிற்றுநர்க்குத் தடை

பார்சிலோனா பயிற்றுநர்க்குத் தடை

1 mins read
500f3abf-81f8-453a-a1a2-b9e65108906a
-

பார்­சி­லோனா: முன்­னணி ஸ்பா­னிய காற்­பந்­துக் குழு­வான பார்சி­லோ­னா­வின் பயிற்­று­விப்­பா­ளர் ரோனல்ட் கூம­னுக்கு (படம்) இரண்டு ஆட்­டங்­கள் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை காடிஸ் - பார்­சி­லோனா குழுக்­கள் மோதிய ஆட்­டம் கோலே­து­மின்­றிச் சம­நி­லை­யில் முடிந்­தது. அந்த ஆட்­டத்­தின்­போது ஆத்­தி­ரத்தை வெளிப்­படுத்தி, ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்­ட­தால் கூம­னுக்­குச் சிவப்பு அட்டை காட்­டப்­பட்­டது.

அச்­சம்­ப­வம் குறித்து விசா­ரித்த ஸ்பா­னிய காற்­பந்­துக் கூட்­ட­மைப்­பின் ஒழுங்­கு­மு­றைக் குழு, கூம­னுக்கு இரண்டு ஆட்­டங்­கள் தடை விதித்­தது.

இத­னை­ய­டுத்து, லெவான்டே, அட்­லெட்­டிகோ மட்­ரிட் குழுக்­களுக்கு எதி­ராக அடுத்து நடக்­க­இருக்கும் ஆட்­டங்­க­ளின்­போது, கூமன் எல்­லைக்­கோட்­ட­ருகே இருந்­த­படி தம் குழு­வி­னர்க்கு அறி­வு­றுத்­தல் வழங்க முடி­யாது.

இது­வரை ஐந்து ஆட்­டங்­களில் விளை­யா­டி­யுள்ள பார்­சி­லோனா குழு ஒன்­பது புள்­ளி­க­ளு­டன் ஸ்பா­னிய காற்­பந்து லீக் பட்­டி­ய­லில் ஏழா­மி­டத்­தில் உள்­ளது. இத­னால் கூம­னுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. விரை­வில் அவர் பத­வி­யில் இருந்து அகற்­றப்­ப­ட­லாம் என்ற தக­வ­லும் வெளி­யான வண்­ணம் இருக்­கிறது.

இத­னி­டையே, கூம­னுக்கு விதிக்­கப்­பட்ட தடையை ஓர் ஆட்­ட­மா­கக் குறைக்­கக் கோரி மேல்­முறை­யீடு செய்­யப்போவதாக பார்சிலோனா தெரிவித்துள்ளது.