சுகாதார அமைச்சு: கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் மெதுவடைந்துள்ளது

2 mins read
0506f317-fbde-40c1-bd80-bff858562947
கொவிட்-19 நோயாளிகளில் ஏறத்தாழ 98.4 விழுக்காட்டினருக்கு அறிகுறி எதுவும் தெரியவில்லை. அல்லது லேசான அறிகுறிகளே தெரிகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சமூக கிரு­மித்­தொற்­றுக்­கான இரட்­டிப்­புக் காலம் மெது­வ­டைந்து இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­து உள்­ளது.

அன்­றா­டம் அதி­கம் பேருக்­குத் தொற்று ஏற்­ப­டு­வ­தன் கார­ண­மாக நாட்­டின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்குக் கணி­ச­மான சுமை ஏற்­பட்டு இருக்­கிறது என்­றா­லும்­கூட தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் மெது­வடைந்து இருப்­ப­தாக அமைச்சு குறிப்­பிட்டு உள்­ளது.

கிரு­மித்­தொற்று இரட்­டிப்­புக் காலம் மூன்று வாரங்­க­ளுக்கு முன் ஆறு முதல் எட்டு நாட்­க­ளாக இருந்­தது. அது இப்­போது ஏறத்­தாழ 10 முதல் 12 நாட்­க­ளாக ஆகி இருக்­கிறது.

கொவிட்-19 தொற்­று­வோ­ரில் ஏறக்­கு­றைய 98.4 விழுக்­காட்­டி­ன­ருக்கு அறி­குறி எது­வும் தெரி­ய­வில்லை. அல்­லது லேசான அறி­கு­றி­கள்­தான் தென்­ப­டு­கின்­றன.

நோயா­ளி­களில் 1.3 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே உயிர்­வாயு சிகிச்சை தேவைப்­ப­டு­கிறது. 0.1% மட்­டுமே தீவிர சிகிச்சைப் பிரி­வில் இருக்­கி­றார்­கள் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடு­மை­யான அறி­கு­றி­கள் அல்லது ஏற்­கெ­னவே மருத்துவப் பிரிச்சினைகள் இருப்­ப­தால் ஏறத்­தாழ 7 விழுக்­காட்டு கொவிட்-19 நோயா­ளி­கள் இப்­போது மருத்­து­வ­மனை­களில் இருக்­கி­றார்­கள்.

முற்­றிய நோயா­ளி­க­ளுக்­கான மருத்துவமனைகளில் மற்றும் சமூக மருத்­து­வ­மனை­களில் உள்ள படுக்­கை­களில் ஏறத்­தாழ 20 விழுக்­காடு படுக்­கை­களை இப்­போது கொவிட்-19 நோயா­ளி­கள் எடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.

தீவிர சிகிச்சைப் பிரி­வில் இருக்கும் 60க்கும் அதிக வய­துள்ள முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை கூடு­த­லாக இருக்­கிறது. அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் அல்­லது முற்­றி­லும் போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள்.

மொத்த மக்­கள்­தொ­கை­யில் 1.5 விழுக்­காட்டை இவர்­கள் பிர­தி­நிதிக்­கி­றார்­கள். என்­றா­லும் தீவிர சிகிச்சை தேவைப்­படும் நோயா­ளி­களில் மூன்­றில் இரண்டு பங்­கி­னர் இவர்­களே ஆவர்.

கடந்த மூன்று மாதங்­களில் தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வந்ததை அடுத்து அவ­ச­ரநிலைப் பிரி­வு­களில் சிறப்பு சிகிச்சை நாடிய நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை எட்டு மடங்கு கூடி இருக்­கிறது.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் முன்­னெச்­ச­ரிக்கை கண்­கா­ணிப்­பிற்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது. கொவிட்-19 நோயா­ளி­களுக்­கான படுக்­கை­க­ளின் எண்­ணிக்கை கடந்த மூன்று மாதங்­களில் 900லிருந்து 2,500 ஆக அதி­க­ரித்து இருக்­கிறது. இந்த எண்­ணிக்­கையை இந்த மாத முடி­வில் 3,700 ஆக ஆக்­கு­வது அமைச்­சின் இலக்­காக இருக்­கிறது.

அவ­சர சிகிச்சை தேவைப்­ப­டாத பொது­மக்­கள் மருத்­து­வ­ம­னை­களை நாட வேண்­டாம் என்று அமைச்சு வலி­யு­றுத்தி கூறி இருக்­கிறது.

குடும்ப மருத்­து­வரை அல்­லது தனி­யார் மருத்­து­வரை நாடும்­படி அவர்களுக்கு அமைச்சு ஆலோசனை கூறி­யுள்­ளது.