கட்டில் உறவால் வலி: அதிகரிக்கும் விழிப்புணர்வு

கட்டில் உறவால் வலி: அதிகரிக்கும் விழிப்புணர்வு

4 mins read
b7a5ae34-81e1-4ae9-8b66-c828d2200e55
'வெஜனிஸ்மஸ்' பிரச்சினை தொடர்பில் உதவி நாடி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். படம்: ஃபிரீபிக் -

ஒரு குழந்­தைக்­குத் தாயாக வேண்­டும் என்­பது திரு­வாட்டி புவா­வின் நீண்­ட­நாள் கனவு. ஆனால் 27 வய­தில் திரு­ம­ணம் செய்­து­கொண்ட அவரால் ஏழு ஆண்­டு­கள் ஆன பின்­னரும் தம் கண­வ­ரு­டன் உறவு கொள்ள முடி­ய­வில்லை.

ஒவ்­வொரு முறையும் கண­வன், மனைவி இரு­வ­ரும் உறவுகொள்­ளும் முயற்­சி­யில் இறங்­கும்போது, கடும் வலி­யில் துடிக்கும் திரு­வாட்டி புவா அழு­து­வி­டு­வார்.

"ஏதோ பயங்­க­ர­மாக என்னை மோது­வது போன்ற உணர்வு ஏற்­பட்­டது," என்று சுகா­தா­ரப் பரா­மரிப்­புத் துறை­யில் மூத்த நிர்­வாகி­யா­கப் பணி­யாற்­றும் அவர் தெரி­வித்­தார்.

இத­னால், கண­வன் மனைவி இடையே அடிக்­கடி சண்­டை­கள் மூண்­டன. இறு­தி­யில் 2016ஆம் ஆண்­டில் இரு­வ­ருக்­கும் விவா­கரத்­தா­னது.

அதற்கு மறு ஆண்டே திரு­வாட்டி புவா உத­வி­பெற கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யின் (கேகே­எச்) பெண்­கள் சுகா­தார, நல நிலை­யத்­தி­லுள்ள பாலி­யல் சுகா­தார மருந்­த­கத்தை நாடி­னார். தமக்கு 'வெஜ­னிஸ்­மஸ்' என்ற பிரச்­சினை இருப்­ப­தாக அங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

'வெஜ­னிஸ்­மஸ்' என்­றால்..

இப்­பி­ரச்­சினை உள்ள மாத­ருக்­குப் பெண் உறுப்­புத் தசை­கள், தானே இறு­கிக்­கொண்டு ஆண் உறுப்­பைப் புகா­மல் தடுப்­ப­து­டன் வலி, எரிச்­சல் அல்­லது சுரீரென்ற உணர்வு ஏற்­படும்.

'வெஜ­னிஸ்­மஸ்' பிரச்­சினை உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்து வரு­கிறது. 2017ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கேகே­எச்­சின் பாலி­யல் சுகா­தார மருந்­த­கத்­தில் கடந்த ஆண்டு பதி­வான 100 புதிய சம்­ப­வங்­கள், 60% அதி­க­ரிப்­பா­கும்.

விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்­ளது

பொது­மக்­கள் மட்­டு­மின்றி சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வழங்­கு­நர்­கள் இடை­யே­யும் விழிப்­பு­ணர்வு அதி­கரித்­துள்­ள­தால் சம்­ப­வங்­கள் கூடு­தலா­கி­யுள்­ளன என்று கேகே­எச்­சின் இனப்­பெ­ருக்க மருத்­து­வப் பிரி­வில் ஆலோ­ச­க­ராக உள்ள டாக்­டர் டான் ஸ்செ யெயுன் கூறி­னார்.

பெரும்­பா­லான பெண்­கள் இப்­பி­ரச்­சினை தொடர்­பில் பல­துறை மருந்­த­கம் அல்­லது தனி­யார் மருந்­த­கத்­தில் ஆலோ­சனை பெற்­று­விட்டு மருத்­துவ நிபு­ணர்­களை நாடி, மக­ளிர் தொடர்­பான பிரச்­சி­னை­ அல்ல என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வர்.

மகப்­பேறு மருத்­து­வர் அல்­லது மக­ளிர் மருத்­துவ நிபு­ணர் பின்­னர் கேகே­எச்­சின் பாலி­யல் சுகா­தார மருந்­த­கத்­துக்­குச் செல்ல பரிந்­துரை செய்­வர். தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் (என்­யு­எச்) கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு 'வெஜ­னிஸ்­மஸ்' பிரச்­சினை தொடர்­பான சம்­ப­வங்­கள் 20% அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பெரும்­பா­லான நோயா­ளி­கள் இது தொடர்­பில் இணை­யத்­தில் தக­வல்­க­ளைப் பெற்­றுக்­கொண்டு நிபு­ணத்­துவ உதவி நாடு­வ­தாக டாக்­டர் சூசன் லோகன் கூறி­னார். இவர் என்­யு­எச்­சின் மகப்­பேறு, மக­ளிர் மருத்­து­வப் பிரி­வில் மூத்த ஆலோ­ச­க­ராக இருக்­கி­றார்.

சமூக ஊட­கங்­கள், இணை­யம் வழி 'வெஜ­னிஸ்­மஸ்' குறித்து பெண்­கள் தக­வல் அறிந்­து­கொள்­கி­றார்­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

'வெஜ­னிஸ்­மஸ்' ஏற்­ப­டக் கார­ணம்

பாலி­யல் ரீதி­யாக போதிய தக­வல்­களை அறிந்­தி­ருக்­கா­தது, பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஏற்­கெ­னவே ஆளா­கி­யி­ருப்­பது அல்­லது வேதனை தந்த பாலி­யல் அனு­ப­வம் போன்­ற­வற்­று­டன் 'வெஜ­னிஸ்­மஸ்' தொடர்பு­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

கண்­டிப்­பான வளர்ப்­பு­மு­றை­யுடனும் இதைத் தொடர்­பு­ப­டுத்­தப்­ப­ட­லாம். பாலி­யல் உறவு கொள்­வது தவறு, குற்­றம் என்ற சமய, கலா­சார நம்­பிக்கை அடிப்­ப­டை­யி­லும் இந்த அறி­குறி ஏற்­ப­ட­லாம்.

இடுப்­பில் அறுவை சிகிச்சை செய்­து­கொண்­ட­வர்­கள் அல்­லது குழந்தை பெற்­ற­வர்­க­ளுக்­கும் இப்­பி­ரச்­சினை ஏற்­படும் வாய்ப்­புண்டு.

உதவி நாடி வரு­வோர்

இந்­தியா, மலே­சியா, இந்­தோ­னீ­சியா நாடு­க­ளைச் சேர்ந்­தோர், தம் உத­வியை நாடி வரு­வ­தாக உற­வு­கள் தொடர்­பில் ஆலோ­ச­க­ரா­க­வும் மருத்­துவ பாலி­யல் நிபு­ண­ரா­க­வும் உள்ள டாக்­டர் மார்த்தா டாரா லீ கூறி­னார்.

'வெஜ­னிஸ்­மஸ்' என்­பது ஓர் 'ஆசிய பிரச்­சினை' என்­றார் அவர்.

கேகே­எச்­சின் பாலி­யல் சுகா­தார மருந்­த­கத்­திற்கு வரும் பெரும்­பாலான 'வெஜ­னிஸ்­மஸ்' நோயாளி­கள், தங்­கள் 30களில் உள்­ள­வர்­கள் என்­றும் திரு­ம­ணத்­திற்­குப் பின் உறவுகொள்ள முடி­யாத நிலை­யில் அல்­லது குழந்தை பெற்­றுக்­கொள்ள விருப்­பம் உள்ள நிலை­யில் இப்­பிரி­வி­னர் உதவி நாடு­வ­தாக டாக்­டர் டான் குறிப்­பிட்­டார்.

செல்­லாத் திரு­ம­ணம் அல்­லது மண­வி­லக்கு என்று கண­வன்­மார் மிரட்­டும்­போது பெண்­கள் உதவி நாடி என்­யு­எச் வரு­வ­தாக டாக்­டர் லோகன் தெரி­வித்­தார்.

திரு­மண உறவு பாதிப்பு

கண­வன் மனைவி இடையே விரி­சல், உற­வில் முறிவு, உள­வி­யல் ரீதி­யான துன்­பு­றுத்­தல், கள்­ளத் தொடர்பு, மண­வி­லக்கு போன்ற சூழ்­நி­லை­க­ளுக்கு 'வெஜ­னிஸ்­மஸ்' பிரச்­சினை இட்­டுச்­செல்­ல­லாம் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

'வெஜ­னிஸ்­மஸ்' பிரச்­சி­னை­யைக் கையாள, பன்­மு­கத்­தன்மை வாய்ந்த ஓர் அணு­கு­முறை தேவைப்­ப­ட­லாம். மருத்­து­வப் பிரச்­சி­னை­க­ளுக்­குச் சிகிச்சை அளிப்­பது, பாலி­யல் கல்வி புகட்­டு­வது, உணர்­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் உத்­தி­க­ளைக் கையாள்­வது, இடுப்­புத் தசை­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிப்­பது, உறவு ஆலோ­ச­கரை நாடு­வது போன்ற வெவ்­வேறு வழி­களில் 'வெஜ­னிஸ்­மஸ்' பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க முய­ல­லாம்.

சிகிச்சை பெற்­ற­தன் பலன்

சிகிச்சை பெற்ற ஓர் ஆண்­டில், 67 முதல் 93% பெண்­க­ளால் வெற்­றி­க­ர­மாக உற­வு­கொள்ள முடிந்­தது. அதே ஓர் ஆண்­டுக்­குள் குழந்தை பெற்­றுக்­கொள்­ளும் நிலையை 50% தம்­ப­தி­ய­ரால் அடைய முடிந்­த­தாக கேகே­எச் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன. 'வெஜ­னிஸ்­மஸ்' பிரச்­சி­னை­யைத் தம்­ப­தி­யர் பலர், தங்­களுக்­குள்­ளேயே வைத்­துக்­கொள்­வதைக் குறிப்­பிட்­டார் டாக்­டர் லோகன். தற்­போ­தைய கால­கட்­டத்­தில் குழந்தை பெற்­றுக்­கொள்ள பாலி­யல் உறவு தேவை­யில்லை என்ற நிலை வந்­து­விட்ட போதி­லும் பிரச்­சி­னைக்­குச் சிகிச்சை நாடு­வது முக்­கி­யம் என்­றார் அவர்.

"ஆண் பெண் இரு­வ­ரது சுய­மரி­யாதை, தன்­னம்­பிக்­கைக்­காக சிகிச்சை நாடு­வது முக்­கி­யம். இல்­லை­யேல், கண்­முன்னே தீர்வு இருந்­தும் அதைக் கண்­டு­கொள்­ளாத நிலை என்­றா­கி­வி­டும்," என்­றார் அவர்.