விருப்பமான இந்திய உணவுவகைகள் ஏர் ஃபிரையரில்

விருப்பமான இந்திய உணவுவகைகள் ஏர் ஃபிரையரில்

2 mins read
e1532fe2-a918-45a4-bd0b-e0755bd248d4
-
multi-img1 of 2

எண்­ணெய்­யில் பொரித்த உண­வில் கலோ­ரி­கள், கொழுப்­புச்­சத்து போன்­றவை அதி­க­மா­கவே இருக்­கும். அத­னால், இப்­போ­தெல்­லாம் பல­ரும் நாடி வாங்­கும் ஒன்று, 'ஏர் ஃபிரையர்'.

இதில் தயா­ரிக்­கப்­படும் உண­வில் கலோ­ரி­கள் 70 முதல் 80% குறைந்­தி­ருப்­ப­து­டன் கொழுப்புச்­சத்­தும் அதி­கம் இருக்­காது என்று கூறப்­ப­டு­கிறது.

நெருப்பு அருகே நின்­று­கொண்டு சமைப்­ப­தைத் தவிர்க்க முடி­வ­து­டன் சமைக்­கும் நேரத்­தை­யும் இச்­சா­த­னம் மிச்­சப்­ப­டுத்­து­கிறது.

அத­னா­லேயே, பல­ரது வீட்­டுச் சமை­ய­ல­றை­யில் 'ஏர் ஃபிரையர்' இடம்­பி­டித்­து­விட்­டது.

மேற்­கத்­திய உணவை மட்­டுமே இதில் தயா­ரிக்க முடி­யும் என்று நீங்­கள் எண்­ணி­யி­ருந்­தால் உங்­கள் மனதை இனி மாற்­றிக்­கொள்­வீர்­கள்.

இந்­தி­யர்­கள் பல­ருக்­கும் விருப்­ப­மான ஆலு கோபி, கோபி மஞ்­சு­ரி­யன், தந்­தூரி சிக்­கன், வெங்­காய பகோடா போன்ற உண­வு­வ­கை­களை­யும் 'ஏர் ஃபிரைய­ரில்' சமைக்க முடி­யும்.

மேலும் ஆரோக்­கிய முறை­யில் ருசி மாறாது தயா­ரிக்­கப்­பட்ட உணவை நாம் எளி­தில் சமைத்­து­வி­ட­லாம்.

இன்று ஆலு கோபி, தந்­தூரி சிக்­கன் ஆகி­ய­வற்­றுக்­கான 'ஏர் ஃபிரையர்' சமை­யல் குறிப்­பு­களை உங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­கி­றோம்.

பொது­வாக 'ஆலு கோபி' தயா­ரிக்க மசாலா, வெங்­கா­யம், தக்­காளி ஆகி­ய­வற்­று­டன் காலி­ஃபி­ள­வர் மற்­றும் உரு­ளைக்­கி­ழங்­கை சேர்த்து அடுப்பு மீது வறுத்­தெ­டுப்­பார்­கள்.

தந்­தூரி சிக்­கன் பற்றி சொல்­லவே வேண்­டாம். தந்­தூரி அடுப்­பில் இட்டு கோழி­யின் தோல் சற்று கருகும்­வரை நெருப்­பில் வாட்­டு­வார்­கள்.

இவ்­வி­ரண்­டை­யும் 'ஏர் ஃபிரைய­ரில்' எவ்­வாறு சமைக்­க­லாம் என்ற செய்­மு­றையை இனி பார்ப்­போம்.

தந்தூரி சிக்கன் (Air-fried Tandoori Chicken)

தந்தூரி மசாலா கலவை:

2 தேக்கரண்டி கரம் மசாலா

1 மேசைக்கரண்டி மல்லித் தூள்

1 தேக்கரண்டி சீரகத் தூள்

1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்

1 தேக்கரண்டி பப்ரிக்கா

1 1/2 தேக்கரண்டி உலர்ந்த

வெந்தய இலைகள்

தந்தூரி மசாலா கலவையை தயார் செய்யவும்.

அதனுடன் 1 கிலோ எலும்பில்லா கோழி, 1/4 கப் தயிர், 2 தேக்கரண்டி அரைத்த இஞ்சி, 2 தேக்கரண்டி அரைத்த பூண்டு, 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

கோழித் துண்டுகளில் அரை அங்குலத்தில் ஆங்காங்கே வெட்டிவிட்டு கலவையைச் சேர்க்கவும்.

முப்பது நிமிடங்களுக்கு மேல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

'ஏர் ஃபிரையரில்' சுமார் 10 நிமிடங்களுக்கு 180 டிகிரி செல்சியசில் வைக்கவும்.

'ஏர் ஃபிரையர்' கூடையைத் திறந்து கோழித் துண்டுகளைத் திருப்பிவிட்டு எண்ணெய்யைத் தடவவும். மீண்டும் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.

ஆலு கோபி (Air-fried Aloo Gobi)

உருளைக்கிழங்கு, காலிஃபி­ள­வர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சிறிதுசிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

அவற்றோடு அரைத்த இஞ்சி, சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு ஆகியவற்றை நன்கு கலந்துவிடவும்.

'ஏர் ஃபிரையரில்' சுமார் 12-15 நிமிடங்களுக்கு 190 டிகிரி செல்சியசில் வைக்கவும்.

தயாரானதும் எடுத்துத் தட்டில் வைத்து எலுமிச்சை சாற்றை ஊற்றிக் கலந்துவிடவும்.

படங்கள்: பைபிங் பாட் கறி, ஸ்பைஸ் கிரேவிங்ஸ்