அழகுடன் ஆரோக்கியத்திற்கும் நகைகள்

அழகுடன் ஆரோக்கியத்திற்கும் நகைகள்

1 mins read
dfd0cb27-49c9-4a15-aa24-3e08137b2ccf
-
multi-img1 of 3
Google News Preferred Icon

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பதின்ம வயதுப் பெண்கள் கழுத்தில் நகை அணியாமல் இருப்பதே அழகு என்று நினைக்கிறார்கள். தமிழர் பாரம்பரியத்தில் நகைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நமது ஆரோக்கியத்தை முன்நிறுத்தியே பண்டைத் தமிழர்கள் நகைகள் அணிவதை பழக்கமாக்கி வந்தனர். அழகுக்கு அணியும் நகைகள் தரும் ஆரோக்கியம்:

நகைகள் அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகள் தூண்டப்பட்டு, ஒவ்வொரு உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றன என்பது பழங்காலந்தொட்டே தமிழர்களிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும். அதிலும் கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்துகொள்வதால் அவர்களுக்கு அதிக 'நேர்மறை சக்தி' கிடைக்கின்றது. மேலும் நகைகள் உடலை உரசிக்கொண்டு இருப்பதால் உடல் வெப்பம் தணிக்கப்படும்.

தற்பொழுது தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விலையில் இருக்கிறது. இந்நிலையில் பதின்ம வயதினர் பலர் கண்களுக்கு கவர்ச்சியாக உடைகளுக்கு ஏற்ற நிறத்தில் கிடைக்கும் 'காஸ்மெடிக்' நகைகளை வாங்கி அணிகின்றனர்.

தங்க நகை ஒன்று வாங்கும் விலைக்கு புடவைக்கு ஏற்ற நிறத்தில் செயற்கை நகைகளை வாங்கிவிடலாம் என்கின்றனர் பதின்ம வயதினர்.