நினைவாற்றல் அதிகரிக்க

நினைவாற்றல் அதிகரிக்க

1 mins read
97b422cf-75c2-4dd5-8416-c93bcbb014fb
-

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்களில் மூளைத் தேய்மான நோய் அல்லது ஞாபக மறதி நோய் எனப்படும் அல்சைமரும் ஒன்று. கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் அணுக்களைச் சிதைக்கும் நோய் இது. இதனால், வயதானவர்கள் ஞாபக சக்தியை இழந்து, ஒரு கட்டத்தில் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மறந்துவிடும் அளவுக்கு விபரீதமான நோயாக மாறி வருகிறது.

மேலே இருக்கும் முத்திரை மூளைக்குச் செல்லும் பிராணவாயு (ஆக்சிஜன்) அளவை அதிகரித்து சக்தி கொடுக்கிறது. மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

செய்முறை: நாற்காலியிலோ விரிப்பிலோ அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்கவேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். அதிகமாக மூளைக்கு வேலை தருபவர்கள், பன்முகச் செயல்பாடுகள் (Multitasking) செய்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய முத்திரை.

பலன்கள்: மூளைக்குச் செல்லும் பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது. ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தை திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம். கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன், சுவையறிதல், தொடு உணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன.