ஒருவழியாக வெற்றி பெற்ற மான்செஸ்டர் சிட்டி

ஒருவழியாக வெற்றி பெற்ற மான்செஸ்டர் சிட்டி

2 mins read
f69ca888-0e96-4967-a6d3-f2939c499fa0
நேற்று பின்னிரவு மான்செஸ்டர் சிட்டி, பர்ன்லி குழுக்களிடையே நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சிட்டி சார்பாக முதல் கோல் போடும் பெர்னாடோ சில்வா (வலது 20ஆம் எண் நீல சீருடையில்). படம்: ஏஎஃப்பி -

மான்­செஸ்­டர்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்டி தர­வ­ரி­சை­யில் நேற்றுவரை முதல் இடத்­தி­லி­ருந்த லிவர்­பூல் அணிக்கு அரு­கி­லேயே இருக்க வேண்­டும் என்ற மான்­செஸ்­டர் சிட்டியின் எண்­ணம் வீண்­போ­க­வில்லை.

நேற்று முன்­தி­னம் பின்­னி­ர­வில் அதன் சொந்த மைதா­னத்­தில் பர்ன்­லியை எதிர்­கொண்ட சிட்டி குழு ஆட்­டத்தை விறு­வி­றுப்­பு­டன் தொடங்­க­வில்லை. இது­வரை எந்­தக் குழு­வை­யும் வெற்றி கொள்­ளாத பர்­னிலிக்கு எதிராக சிட்டி குழு அப்­படி ஒன்­றும் எளி­தில் வெற்­றிக்கொடி நாட்­டி­வி­ட­வில்லை.

வார தொடக்­கத்­தில் தனக்கு அதி­கம் விளை­யா­டும் வாய்ப்­புக் கிட்­டு­வ­தில்லை என்ற வருத்­தத்­தில் தான் வேறு குழு­வுக்கு செல்ல விரும்புவ­தாக சூச­க­மாக அறி­வித்த ரஹீம் ஸ்டெர்­லிங்கை நேற்­றைய ஆட்­டத்­தில் ஆரம்­பத்­தி­லி­ருந்தே கள­மி­றக்­கி­னார் சிட்டி நிர்­வாகி பெப் கார்­டி­யோலா. எனி­னும், அவர் பெரி­தாக சோபிக்­க­வில்லை என்றே செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன. இதேபோல், சிட்டி தாக்­கு­தல் வரி­சை­யில் இடம் பிடித்­தி­ருந்த மற்­றொரு தாக்­கு­தல் ஆட்­டக்கார­ரான ரியாட் மாஹ்­ரே­சும் வெட்­டி­யாக பொழு­தைப் போக்­கிக் கொண்­டி­ருந்­தார் என்றே காற்­பந்து விமர்­

ச­கர்­கள் விளா­சித் தள்­ளு­கின்­ற­னர். எது எப்­ப­டியோ, ஆட்­டத்­தின் 12ஆம் நிமி­டத்­தில் சிட்­டி­யின் பெர்­னாடோ சில்வா, ஃபில் ஃபோடன் அடித்த பந்தை பர்ன்லி கோல்­காப்­பா­ளர் தடுத்து பந்து தன்­பக்­கம் வரவே, சிட்­டி­யின் முதல் கோலைப் போட்டு கார்­டி­யோலா நிம்­ம­திப் பெரு­மூச்சு விட வழி­வ­குத்­தார்.

பின்­னர், ஆட்­டத்­தின் 70ஆம் நிமி­டத்­தில் பர்ன்­லி­யின் தற்­காப்பு வீரர்­கள் செய்த தவற்றை பயன்­

ப­டுத்­திக்கொண்ட சிட்­டி­யின் கெவின் டி பிரய்ன தமது அணி சார்­பாக இரண்­டாவது கோலைப் போட்டு மான்­செஸ்­டர் சிட்­டி­யின் வெற்­றியை உறுதி செய்தார்.

பிரிமியர் லீக் தரவரிசையில் 17 புள்ளிகள் பெற்று மூன்றாவது நிலையில் இருக்கிறது சிட்டி குழு.