இறுதிக்கட்ட நெருக்கடி; சமாளித்த செல்சி

இறுதிக்கட்ட நெருக்கடி; சமாளித்த செல்சி

1 mins read

லண்­டன்: நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மற்­றொரு பிரி­மி­யர் லீக் போட்­டி­யில் ஆட்­டத்­தின் இறு­திக்­கட்­டத்­தில் அலை அலை­யாக தாக்கு­தல் மேற்­கொண்ட பிரி­மி­யர் லீக் புது வர­வான பிரண்ட்­ஃபர்ட் அணியை சமா­ளித்து லீக் தர­வ­ரி­சை­யில் தனது முத­லி­டத்­தை தக்­க­வைத்­துக் கொண்­டது தாமஸ் டுக்­க­லின் செல்சி அணி. பிர­மி­யர் லீக் தொடக்க ஆட்­டங்­களில் விளை­யாட வாய்ப்­பின்­றித் தவித்த செல்சியின் பென் சில்­வெல், ஆட்­டத்­தின் 45ஆம் நிமி­டத்­தில் பிரண்ட்­ஃபர்ட் அணி­யின் தற்­காப்பு வீரர்­கள் செய்த தவற்­றால் கோல் போட்­டார். பின்­னர், இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் பிரண்ட்­ஃபர்ட் மேற்­கொண்ட தொடர் தாக்­கு­தல்­களை செல்சி கோல்­காப்­பா­ளர் மெண்டி அற்­பு­த­மா­க­த் தடுத்து தமது அணி­யைக் காப்­பாற்­றி­னார். ஆட்­டம் பற்­றிக் கூறிய தாமஸ் டுக்­கல், "முதல் 70 நிமி­டங்­களில் குழு மிக­ச் சிறப்­பாக விளை­யா­டி­யது, கடைசி 20 நிமி­டங்­கள் அதிர்ஷ்­டம் காப்­பாற்­றி­யது," என்று கன­கச்­சி­த­மாக ஆட்­டத்தை விவ­ரித்­தார்.