பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

1 mins read
0f738506-2ad2-4060-b337-ce8e66f3adb9
-

விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையை வீட்டிற்கு எடுத்து வந்தார். அக்கழுகு முட்டையை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு வைத்து அடைகாக்க செய்தார்.

சில நாட்களுக்குப் பின்னர் கோழிக் குஞ்சுகளோடு கழுகுக் குஞ்சும் வெளி வந்தது. மற்ற கோழிக்குஞ்சுகளுடன் சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையைத் தேடி உண்டு கொண்டிருந்தது.

ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகுக் குஞ்சிடம், ஒரு கோழிக்குஞ்சு வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகைக் காட்டி, "அந்த கழுகைப் பார்! எவ்வளவு உயரத்தில் பறக்கின்றது. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது," என்று கவலையோடு கூறியது. இதைக் கேட்ட அந்த கழுகுக் குஞ்சும், "ஆமாம். நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது," என்றது.

கழுகுக் குஞ்சுவிடம் அந்த மேகத்தை தாண்டிப் பறக்கும் வலிமை இருந்தபோதிலும் கோழிக் குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.

லட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும் நட்புகளோடு சேர்ந்தால் வாழ்வு வளம் பெறும். 'பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்,' என்ற பழமொழிப்படி நாம் நம் சேர்க்கையைப் பொறுத்தே, நமது வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.

பரிஷா, தொடக்கநிலை 5

கொங்ஷாங் தொடக்கப்பள்ளி