அனைத்து வயதினரையும் ஈர்க்கும் 'பாவாஸ் டெலிகசிஸ்'

அனைத்து வயதினரையும் ஈர்க்கும் 'பாவாஸ் டெலிகசிஸ்'

2 mins read
18d1252f-96b1-4996-8ec6-662d93ea4255
சேலம் ஆட்டையாம்பட்டி முறுக்கு உட்பட புது வரவுகளுடன் பல வகையான காரங்களை மூன்று இடங்களில் பலகாரங்களுக்குப் பெயர் போன 'பாவாஸ் டெலிகசிஸ்' விற்கிறது. படம்: பாவாஸ் டெலிகசிஸ் -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

காரம் சாப்­பி­டு­வோ­ருக்கு ஆந்­திரா முறுக்கு, குழந்­தை­கள் விரும்பும் 'நட்­டேலா எல்­மன் குக்­கீஸ்', பெற்­றோர் சுவைத்து மகிழ 'குவே தார்ட்', 'சுஜி' வகை­கள்.

இப்­படி 2000ஆம் ஆண்­டில் இ­ருந்து குடும்­பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற பண்­டிகை கால பலகாரங்களின் மொத்த விற்­பனை நிறு­வ­ன­மாக செயல்படுகிறது 'பாவாஸ் டெலி­க­சிஸ்'.

"இவ்­வாண்டு, வழக்­க­மான தீபா­வளிச் சந்தை இல்­லையே என்ற ஏக்­கம் மக்­க­ளுக்கு இருக்­க­லாம். ஆனால் தீபா­வ­ளிக்கு வேண்­டிய பொருட்­கள் அனைத்­தை­யும் வாங்­கிச் செல்­வ­தற்கு லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் தற்­கா­லிக கடை­களை திறந்து அவற்றை விற்க முயல்­கின்­ற­னர்," என்று கூறி­னார் 'பாவாஸ் டெலி­க­சிஸ்' உரி­மை­யா­ளர் திரு முகம்­மது ஃபருக்.

இம்முறை 'பாவாஸ் டெலி­க­சிஸ்' வகை­களை நேர­டி­யாக வாங்­கிச் செல்ல, வாடிக்­கை­யா­ளர்­கள் அங்­கும் இங்­கும் தேட வேண்டிய அவ­சி­யம் இருக்­காது.

கேம்பல் லேனில் இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­திற்கு எதிரே இருக்­கும் கடை, எண் 131 டன்­லப் ஸ்திரீட், எண் 70 சிராங்­கூன் சாலை ஆகிய இடங்­களில் பலவகையான பலகாரங்கள் கிடைக்­கும். கூடு­த­லான பல­கார வகை­களை வாங்­கிச் செல்­வோர் தள்­ளு ­ப­டி­யை­யும் எதிர்­பார்க்­க­லாம்.

சேலத்­தின் பிர­ப­ல­மான 'ஆட்­டை­யாம்­பட்டி' முறுக்கு வகை இவ்­வாண்­டின் 'பாவாஸ் டெலி­க­சிஸ்' பல­கார வகை­க­ளின் புது­வ­ர­வா­கும்.

அண்மைய கால­மாக, கார­மான உரு­ளைக்­கி­ழங்கு 'ஃபிங்கர் சிப்ஸ்', வாழைப்­பழ 'சிப்ஸ்', பட்­டர்ஸ்­காட்ச் குக்­கீஸ், கெப்­பி­சினோ சாக்­லட் குக்­கீஸ் என புது­வ­கை­கள் அறி­மு­கம் கண்­டுள்­ளன.

முடிந்­த­வ­ரை­யில் கட்­டுப்­ப­டி­யான விலை­யி­லேயே பல­கா­ரங்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன என்று கூறிய திரு ஃபருக், மூடி­யு­டன் கூடிய போத்தல்களில் விற்­கப்­படும் குக்­கீஸ் வகை­கள் சரா­ச­ரி­யாக $16க்கு விற்­கப்­ப­டு­கின்­றன என்­றார். ஒவ்­வொரு போத்த­லி­லும் சுமார் 40-50 குக்­கீஸ் இருக்­கும்.

நேர­டி­யாக லிட்­டில் இந்­தி­யா­வுக்கு வந்து இவற்றை வாங்க முடியாதவர்கள் https://www.bawas.com.sg/ என்ற இணை­யப் பக்­கத்­தி­லி­ருந்­தும் இவற்றை வாங்­க­லாம். குறிப்­பிட்ட தொகைக்கு வாங்­கி­னால் இல­வ­ச­மாக வீட்­டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு மேலாக 'வாட்ஸ்­அப்' செயலி வழி­யும் பல­கா­ரங்­களை வாங்கலாம். இது குறித்த மேல் விவ­ரங்­க­ளுக்கு பாவாஸ் டெலி­க­சிஸ் ஃபேஸ்புக் பக்­கத்­திற்கு செல்­ல­லாம்.