இந்து இளங்கோவன்
இந்த ஆண்டாவது உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருடனும் சேர்ந்து புத்தாடை உடுத்தி, நிறைய புகைப்படங்கள் எடுத்து, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த வர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே.
ஆடம்பரமற்ற கொண்டாட்டங்கள் என்றாலும் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி ஆடை அலங்காரங்களில் புதுமைக்குப் பஞ்சமில்லை.
கிருமித்தொற்று துவங்கியதிலிருந்து ஆடை விற்பனையாளர்கள் பலர் தங்களது வியாபாரத்தை இணையத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். என்னதான் பலர் இணையத்தில் ஆடைகளை வாங்கினாலும் நேரில் சென்று ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கிச் செல்வதையே சிலர் விரும்புகின்றனர். ஆடைகளை நேரில் சென்று ரசிப்பதில் தனி மகிழ்ச்சி இவர்களுக்கு.
லிட்டில் இந்தியாவில் தீபாவளிக்கு என்னென்ன புதுமையான ஆடை அணிகலன்கள் விற்பனையா கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள லிட்டில் இந்தியா சென்றோம்.
தற்போதைய சூழலால் ஆரவாரம் குறைந்திருந்தாலும் அதற்கேற்றவாறு பவனிவரும் ஆடம்பரமற்ற அழகிய ஆடை, அணிகலன்கள்

