சேலைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்

சேலைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்

2 mins read
8ee4caf4-69d5-4493-b3f6-38e5fb23097c
'ரெடிமேட்' சேலை­கள். படம்: திமத்தி டேவிட் / தமிழ் முரசு -
multi-img1 of 2

வெல்க்ரோ வேஷ்­டி­க­ளின் காலம் போய் இப்­போது கச்­சி­த­மா­கப் பொருந்­தும் 'ரெடி மேட்' சேலை­கள் கடை­களை நிரப்­பு­கின்­றன. ஒரு சேலையை தனி­யாக சரி­யாக கட்டு­வ­தற்கு குறைந்­தது 15 நிமி­டங்­கள் எடுக்­கும், ஆனால் 15 நொடி­க­ளுக்­குள் கட்­டி­வி­டும் அள­விற்கு சேலை கட்­டு­வதை எளி­மை­யா­கி­விட்­டது 'ரெடிமேட்' சேலை­கள். வெளிர் நிறங்­களில் சேலை­கள், கல்­யாணி காட்­டன் சேலை­கள், வெள்ளி ஜரிகை சேலை­கள், யானை பார்­டர் சேலை­கள் என இவ்­வாண்டு சுடி­தார், லெஹெங்­காவை விட பல­ரின் கவ­னம் சேலை­க­ளின் பக்­கம்­தான் திரும்­பி­யி­ருக்­கிறது. நமது பாட்டி காலத்­தில் அணி­யப்­பட்ட சேலை­க­ளெல்­லாம் இப்­போது மீண்­டும் பேஷன் ஆகி­விட்­டது. அதி­லும் குறிப்­பாக கல்­யாணி காட்­டன் சாரி­கள் நமது பாட்­டி­மார்­கள் அணி­யும் சேலை­கள் போலவே உள்­ளன. இணைய வர்த்­த­கர்­க­ளுக்­குப் போட்­டி­யாக லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­களும் புது­மை­யான சேலை­களை இறக்கி மீண்­டும் வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க முயல்­கின்­ற­னர்.

"மிக எளி­மை­யான சேலை­க­ளைத்­தான் வாடிக்­கை­யா­ளர் விரும்பி வாங்­கு­கின்­ற­னர். அதிக கொண்­டாட்­டங்­கள் இல்­லா­த­தால் எப்­போது வேண்­டு­மா­னா­லும் அணிந்­து­கொள்­ளக்­கூ­டிய சேலை­களை வாங்கி செல்­கின்­ற­னர்.

ஒரு வாடிக்­கை­யா­ளர் அடுத்த ஆண்டு பொங்­க­லுக்கு சேலை வாங்கிச் செல்­வ­தாக கூறி­னார்," என்று சிரித்துக்­கொண்டே சொன்னார் சிங்­கப்­பூ­ரில் பிர­ப­ல­மாகி­வ­ரும் 'பட்­டுக்­கடை' என்­னும் சேலை கடை­யின் உரி­மை­யா­ளர் குமாரி காயத்ரி. இவ­ரது கடை­யில் காஞ்­சி­பு­ரத்­தி­லி­ருந்து பட்டுச் சேலை­கள், வடஇந்­தி­யா­வி­லி­ருந்து கைத்­தறி சேலை­கள், ஆந்­தி­ரா­வி­லி­ருந்து காட்­டன் சேலை­கள் என பல வகை சேலை­கள் (தலைப்பிற்கு மேல் உள்ள படம்) விற்­ப­னை­யா­கின்­றன. இணைய வர்த்­த­க­மான 'பட்­டுக்­கடை' இப்­போது தற்­கா­லி­க­மாக தீபா­வ­ளிக்கு அப்­பர் டிக்­சன் சாலை­யில் உள்ள ஓரி­டத்­தில் ஒரு கடையை திறந்­துள்­ளது.

பாதுகாப்பான கொண்டாட்டத்திற்கு அழகிய முகக்கவசங்கள்

முகக்­க­வ­சம் என்­பது அன்­றா­டம் நாம் உடுத்­தும் ஆடையை போல் ஆகி­விட்­டது. முகக்­க­வ­சம் இல்­லா­மல் வீட்டை விட்டு செல்ல முடி­யாது. இந்நிலை­யில், தீபா­வ­ளிக்கு அணி­யும் ஆடைக்கு ஏற்ப அதே நிறத்­தில்,

வடி­வ­மைப்­பில் இப்­போது முகக்­க­வ­ச­மும் வந்­து­விட்­டது.

தேக்கா சந்­தை­யில் விற்­ப­னை­யா­கும் ஆடை­கள் ஒவ்­வொன்­றிற்­கும் அதற்கு பொருத்­த­மான முகக்­க­வ­ச­மும் ஆடை­யோடு விற்­கப்­படுகிறது.

தேக்கா சந்தை தையல்­கா­ரர்­கள் தீபா­வளி காலத்­தில் சேலை ரவிக்கை­களை ஓய்­வின்றி தைக்­கும் காலம் போய் இப்­போது அழ­க­ழ­காக ஆடை­க­ளுக்கு பொருத்­த­மான முகக்­க­வ­சங்­க­ளை­யும் தைத்­து­வருகின்­ற­னர்.