இளையர்களை ஈர்க்கும் ஷராரா

இளையர்களை ஈர்க்கும் ஷராரா

1 mins read
c903c201-69b1-43ec-9c09-907252bf1683
தேக்கா சந்தையில் ஷராரா ஆடைகள். படம்: திமத்தி டேவிட் / தமிழ் முரசு -

தேக்கா சந்­தை­யில் இப்­போது லெஹெங்கா, சேலையைத் தவிர்த்து ஷராரா என்­னும் ஆடை வகை­யும் பர­வ­லாக விற்­பனை ஆகின்­றன. இந்த ஆடை பார்ப்­ப­தற்கு பாவாடை(skirt) போல் இருந்­தா­லும் கால்­சட்டை(pants) வகையை சேரும். ஷராரா சூட்­டில், குர்தா, பேன்ட் மற்­றும் துப்­பட்டா ஆகி­யவை அடங்­கும். முக­லாய காலத்­தில் அறி­மு­க­மான ஷராரா, இந்­தி­யா­வி­ல் குறிப்­பாக லக்­னோ பகு­தி­யி­ல் பர­வ­லாக அணி­யப்­ப­டு­கிறது.

இந்த வகை உடையை பொது­வாக உல­கெங்­கி­லும் உள்ள பாகிஸ்­தான், முஸ்லிம் பெண்­கள் அணி­கின்­ற­னர். இந்­தி­யா­வின் பாம்பே, டெல்லி பகு­தி­க­ளி­லி­ருந்து கொண்டு­வ­ரப்­படும் ஷராரா, சிங்­கப்­பூ­ரில் சென்ற தீபா­வளி அன்றே விற்­ப­னை­யா­கத் தொடங்­கி­யது. கடந்த ஆண்டு விற்­பனை அதி­கம் இல்­லை­யென்­றா­லும் இவ்­வாண்டு இந்த வகை ஆடை பல­ரால் விரும்பி வாங்­கப்­ப­டு­கிறது என்று கூறி­னார் தேக்கா சந்­தை­யில் இருக்­கும் ரோஸ் பேஷன் ஆடை விற்­ப­னை­யா­ளர் திரு­மதி ரதி அழ­கிரி, 40.

சிறு குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனைத்து வய­தி­ன­ரும் அணி­யக்­கூ­டிய விதத்­தில் பல்­வகை ஷரா­ராக்­களை விற்­கிறது தேக்கா சந்தை.

வியா­பா­ரம் இந்த ஆண்­டும் சற்று மந்­த­மாக இருந்­தா­லும் இப்­போது கடந்த சில ஆண்­டு­க­ளா­கக் கூட்­டம் அதி­க­மாக வரு­வது கடைக்­கா­ரர்­க­ளுக்கு உற்­சா­கம் தந்­துள்­ளது.