நயன்தாராவாக ஆசையா? வழி இருக்கிறது

நயன்தாராவாக ஆசையா? வழி இருக்கிறது

1 mins read
00899267-5a84-4da8-beb7-2799ea616cbe
-

தமிழ் சினிமா நடி­கை­கள் உடுத்­திய ஆடை­கள், அணி­க­லன்­கள் பிர­ப­ல­மாகி விற்­ப­னை­யா­வது வழக்­கம். இவ்­வாண்டு தீபா­வ­ளிக்கு சிங்­கப்­பூ­ரி­லேயே பல நயன்­தா­ராக்­களை நாம் காண­லாம். நயன்­தாரா (படம்) விருது நிகழ்ச்சி­யில் அணிந்­த கழுத்­தணி, மூக்­குத்தி அம்­மன் படத்­தில் அணிந்­த பட்­டுப் புடவை, மூக்­குத்தி போன்ற அனைத்­தும் இப்­போது சிங்­கப்­பூ­ரி­லேயே கிடைக்­கின்­றன. அப்­பர் டிக்­சன் சாலை­யில் உள்ள 'For Desi by Desi' என்­னும் கடை சிங்­கப்­பூ­ரில் இந்­திய அணி­க­லன்­கள் விற்­ப­னை­யில் பிர­ப­லம்.

நயன்­தாரா அணிந்த அணி­க­லன்­களை இக்­க­டை­யில் விரும்பி வாங்­கிச் செல்­கின்­ற­னர் வாடிக்­கை­யா­ளர்­கள். "இப்­போ­தெல்­லாம் இந்­திய ஆடை­கள் உடுத்­தி­னால் சிறிய மூக்­குத்தி அணி­வதை விரும்­பு­கின்­ற­னர் பெண்­கள். எங்­க­ளது கடை­யில் பல­வித மூக்­குத்­தி­களும் விற்­ப­னை­யா­கின்­றன. மூக்­குத்தி அம்­மன் திரைப்­ப­டத்­திற்கு பிறகு வாடிக்­கை­யா­ளர்­கள் பெரிய வகை மூக்­குத்­தி­க­ளை­யும் விரும்பி வாங்கிச் செல்­கின்­ற­னர்," என்­றார் 'For Desi by Desi' உரி­மை­யா­ளர் திரு­மதி ஷோபனா.