ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி ஒளியூட்டு அலங்காரத்தில் மயில் ஒரு முக்கிய அங்கத்தை வகிக்கும். இந்த மயில் இப்பொது ஆண்கள் அணியும் வேட்டிகளுக்கும் அழகு சேர்க்கிறது.
ஜுவெல் பேலசில் எளிய வெள்ளை வேட்டிகள்கூட அழகிய வடிவமைப்புகளுடன் விற்பனையாகின்றன.
சிங்கப்பூரில் ஒரு குடும்பத்தில் அம்மா அப்பா பிள்ளைகள் அனைவர்க்கும் ஒரே மாதிரியான டிசைன்களில் ஆடைகளைத் தெரிவு செய்து கொடுக்கின்றனர் கடைக்காரர்கள். ஒரு சேலையை தேர்வு செய்து கொடுத்தால் அதற்குப் பொருத்தமான ஜிப்பாவை அவர்களே எடுத்துக் கொடுப்பர்.
பொதுவாக சிங்கப்பூரில் மலாய்க்காரர்கள் பண்டிகை காலத்தின்போது பொருந்தும் ஆடைகளை அதிகம் உடுத்திப் பார்த்திருப்போம். இப்போது இந்த வழக்கம் இந்தியர்களிடமும் பிரபலமாகி வருவதாகக் கூறினார் ஜுவெல் பேலஸ் விற்பனையாளர்கள்.

