லண்டன்: இங்கிலாந்து காற்பந்து காரபாவ் கிண்ணப் போட்டி ஒன்றில் லீட்ஸ் யுனைடெட் குழுவுக்கு எதிராக நேற்று அதிகாலை ஆர்சனல் களமிறங்கியது.
அதில் ஆர்சனல் தாக்குதல் வீரர் எடி இங்கெட்டியா என்பவர் போட்ட இரண்டாவது கோல் ஆர்சனல் குழுவின் 2-0 என்ற கோல் எண்ணிக்கையிலான வெற்றியை உறுதி செய்தது. ஆர்சனலின் முதல் கோலை கேலம் சேம்பர்ஸ் என்பவர் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் போட்டார். அதன் இரண்டாவது கோலை 69ஆவது நிமிடத்தில் போட்ட எடி இங்கெட்டியாவை அந்தக் குழுவின் நிர்வாகி மிக்கெல் அர்டெட்டா வானளாவப் புகழ்ந்தார்.
லீட்ஸ் குழு கோல்காப்பாளர் செயலிழந்து கிடந்த நொடிப் பொழுதில் பந்தை வலைக்குள் புகுத்தி ஆர்சனலின் இரண்டாவது கோலை, லீட்ஸ் குழுவிலிருந்து இரவல் வீரராக ஆர்சனலுக்கு வந்த, இங்கெட்டியா போட்டார்.
"அவர் (இங்கெட்டியா) மிகச் சிறந்த விளையாட்டாளராக வருவார் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
"அவர் ஆர்சனலில் தொடர்ந்து இருப்பார் என்றும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என பல புதிய வீரர்களான எமில் ஸ்மித், ரோவ், புக்காயோ சாக்கா போன்ற இளம் வீரர்களை உருவாக்கிய அர்ெடட்டா கூறினர்.
"அவர் இங்கிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் மீது நான் பெரு மதிப்பு வைத்துள்ளேன். அவர் இந்தக் குழுவிலேயே தொடரந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன்," என விளக்கினார்.நேற்றைய ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடங்கியதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதில் லீட்ஸ் குழுவே ஆரம்பத்தில் முனைப்புடன் விளையாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆர்சனல் தனது முதல் கோலைப் போட்டவுடன் ஆட்டத்தின் போக்கு மாறியதாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது. ஆர்சனலின் முதல் ேகால் போனவுடன் லீட்ஸ் குழு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் லீட்ஸ் குழு தனது கட்டுக்கோப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் செளத்ஹேம்டன் அணியை வெற்ற கொள்ள பிரிமியர் லீக் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செல்சி அணி பெனால்டி வாய்ப்புகளை நம்பிக் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது.
முதல் பாதி ஆட்டத்தில் செல்சி அணி ஒரு கோல் போட செளத் ஹேம்டன் குழுவின் செ ஆடம்ஸ் சமநிலை செய்தார். பின்னர் நடந்த பெனால்டி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட செல்சி இறுதியில் 4-3 என பெனால்டி கோல்களில் வெற்றி வாகை சூடியது.

