மரணத்தைப் பேசும் நரகக் காட்சியகம்

1 mins read
8b6b6f12-1547-48c7-a938-ab816146a3c0
நர­கத்­தின் காட்­சி­ய­கத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில், தாளாள் செய்யப்பட்ட இந்த உருவச் சிலையும் ஒன்று. டா ஷி யே எனும் இந்தக் கீழ் உலக தெய்வம், சீனர்கள் பின்பற்றும் தாவோ சமயத்தில், பேய்களின் அரசனாகக் கருதப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெள்ளி 29 10 2021 | வாழ்வும் வளமும் 11 -

மர­ணம் பற்­றி­யும் அதற்கு அப்­பால் உள்ள­வற்­றைப் பற்­றி­யும் விளக்­கும் காட்­சி­யகம் ஹாவ் பார் வில்லா வளா­கத்­தில் இன்று திறக்­கப்­பட்­டுள்­ளது. நர­கத்­தின் காட்­சி­ய­கம் என்று அதற்­குப் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

உல­கின் வெவ்­வேறு சம­யங்­களும் பண்­பா­டு­களும் வெவ்­வேறு கால­கட்­டங்­களில் மர­ணத்­தை­யும் மறுமை எனப்­படும் உயிர் பிரிந்த பின் உள்ள நிலை­யை­யும் எவ்­வாறு பார்க்­கின்­றன என்­பதை இந்தக் காட்­சி­ய­கம் விளக்­கும்.

இத்­த­கை­ய கருப்­பொ­ரு­ளைக் கொண்ட முதல் அரும்­பொ­ரு­ள­கம் இது என்று காட்­சி­ய­கம் அதன் இணை­யப்­ பக்­கத்­தில் கூறியது.

இக்­காட்­சி­ய­கம் 3,800 சதுர அடி பரப்­ப­ள­வில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

காட்­சி­ய­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள பல்­லூ­ட­கக் கண்­காட்­சி­யில் சிறப்­புக் காணொ­ளி­கள் இடம்­பெறு­கின்­றன. இவை, உயிர்நீத்­த­வர் களுக்­கான சடங்­கு­க­ளை­யும் நிகழ்­வு­க­ளை­யும் இன்­னும் பல அம்­சங் களை­யும் விளக்­கு­கின்­றன.

மேலும், அங்கு வைக்­கப்­பட்­டுள்ள சிறப்­புக் காட்­சிப் பொருள்­கள், மர­ணச் சடங்குகளில் உல­கின் முக்­கிய சம­யங்­க­ளி­டையே உள்ள ஒற்­று­மை­களை ஒப்­பிட்­டுப் பார்க்க உத­வும்.

அத்­து­டன், நர­கத்­தின் பத்து வாசல்­க­ளைக் குறிக்க ஹாவ் பார் வில்­லா­வில் வைக்­கப்­பட்­டுள்ள சிலை­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வும் புதிய காட்­சி­ய­கம் உத­வும்.

பாசிர் பாஞ்­சாங் சாலை­யில் உள்ள ஹாவ் பார் வில்லா, 84 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கட்­டப்­பட்­டது.