துரித உணவுகளில் நலம்தராத வேதிப்பொருள்: ஆய்வு முடிவுகள்

துரித உணவுகளில் நலம்தராத வேதிப்பொருள்: ஆய்வு முடிவுகள்

1 mins read

நெகி­ழிப் பொருள்­களை மென்­மை­யா­ன­தாக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் 'தாலேட்' எனும் வேதிப்­பொ­ருள், மெக்­னோல்ட்ஸ், பர்­கர் கிங், பீட்சா ஹட், டோமி­னோஸ் உள்­ளிட்ட முன்­னணி துரித உண­வுக்­க­டை­களில் இருந்து வாங்­கிய உண­வுப்­பொ­ருள்­களில் இருந்­தது ஆய்­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த உண­வுக்­க­டை­களில் இருந்து ஹாம்­பர்­கர், ஃபிரைஸ், சிக்­கன் நக்­கெட், சிக்­கன் பரிட்டோ, சீஸ் பீட்சா உள்­ளிட்ட 66 உண­வு­வ­கை­களை ஆய்­வாளர்­கள் வாங்கி ஆய்­வு செய்தனர்.

அவற்­றில் 80% உண­வு­வ­கை­களில் 'டிஎன்­பிபி', 70% உண­வு­ வ­கை­களில் 'டிஇ­எச்பி' ஆகிய 'தாலேட்'டுகள் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இவ்­விரு வேதிப்­பொ­ருள்­களும் இனப்­பெ­ருக்­கச் சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளு­டன் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

நாள­மில்­லாச் சுரப்­பி­க­ளைப் பாதிக்­க­வல்ல 'தாலேட்'டுகள், அழகு­ சா­தனப் பொருள்­கள், சல­வைப்­பொ­ருள், ஒரு­முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கையு­றை­கள் போன்­ற­வற்­றின் தயா­ரிப்­பில் பயன்­ப­டுத்தப்­ ப­டு­கின்­றன.

ஆஸ்­துமா, குழந்­தை­க­ளி­டம் மூளை பாதிப்பு உள்­ளிட்ட கடு­மை­யான உடல்­ந­லக் குறை­பா­டு­களை ஏற்­ப­டுத்­தும் அபா­யத்­தை­யும் 'தாலேட்'டுகள் கொண்­டுள்­ளன.

இது­கு­றித்த ஆய்­வுக் கட்­டுரை, அமெ­ரிக்­கா­வின் ஜார்ஜ் வாஷிங்­டன், டெக்­ச­ஸில் உள்ள சௌத்­வெஸ்ட் ஆய்­வுக் கழ­கம், போஸ்­டன் பல்­க­லைக்­க­ழ­கம், ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றின் ஆய்­வா­ளர்­க­ளால் இந்த ­வார வெளிப்­பாட்டு அறி­வி­யல், சுற்­றுப்­புற நோய்த்­தொற்­றி­யல் சஞ்சிகை யில் வெளி­யா­கி­யுள்­ளது.

சிக்­கன் பரிட்டோ, சீஸ்­பர்­கர் போன்ற இறைச்சி அடங்­கிய உணவு­ வ­கை­களில் அந்த வேதிப்­பொ­ருள்­கள் அதி­க­ள­வி­லும் சீஸ் பீட்­சா­வில் குறைந்த அள­வி­லும் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஆயி­னும், சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு ஆணை­யத்­தின் சுகா­தா­ரப் பாது­காப்பு வரம்­பு­க­ளுக்­குக் குறை­வா­கவே 'தாலேட்'டுக­ளின் அளவு இருந்­தது.