தீபாவளி விருந்துக்கு மாற்று வழிகள்

தீபாவளி விருந்துக்கு மாற்று வழிகள்

2 mins read

தீபா­வளி என்­றால் முத­லில் நினை­வுக்கு வரு­வது சுவையான விருந்­தும் பல­கா­ரங்­களும்தான். ஆனால், இனிப்­பையும் எண்­ணெய்யை­யும் குறைத்து உடல்­ந­ல­னைப் பேணு­வ­து­தான் இந்த நேரத்தில் மிகப் பெரி­ய சவால். அதற்கு சில மாற்று வழி­களை நிபு­ணர்­கள் எடுத்­து­ரைக்­கின்­ற­னர்.

"நீங்­கள் தயா­ரிக்­கும் விருந்து குறைந்­தது 80% சுகா­தா­ர­மா­னது என்­பதை உறுதி செய்­யுங்­கள்," என்று இந்­தி­யா­வைச் சேர்ந்த உடல்­நல, நீரி­ழிவு நோய் ஆலோ­ச­கர் திலகா மணி­கண்­டன் தி டைம்ஸ் ஆஃப் இந்­தியா செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார். சில மாற்­றங்­க­ளைச் செய்து இதர 20 விழுக்­காட்­டை­யும் உடல் நல­னுக்கு உகந்­த­தாகச் சமைக்­க­லாம் என்­றார் அவர்.

முத­லில், நிறைய எண்­ணெ­ய் யில் பொரிப்­ப­தற்­குப் பதில் அவிக்­கும், பேக் செய்­யும், குறைந்த எண்­ணெ­யைப் பயன்­ப­டுத்தி பொரிக்­கும் உண­வு­க­ளைத் தேர்ந்­தெ­டுக்கலாம் என்று திலகா குறிப்­பிட்­டார்.

அல்லது 'ஏர்-ஃபிரையர்' கரு­வி­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

கிழங்கு வகை­களை விடுத்து, ஸுக்­கினி போன்ற காய்­க­றி­க­ளைப் பயன்­ப­டுத்­தலாம் என்று ஆலோ­ச­கர் ஹீனா குஜ்­ரால் கூறி­னார்.

மேலும், வெள்­ளைச் சீனியை விடுத்து பல­கா­ரங்­களில் கருப்பட்டி, வெல்­லம் ஆகியவற்றைக் குறை­வா­கப் பயன்­ப­டுத்­த­லாம்.

முறுக்கு, சீடை போன்ற பல­கா­ரங்­க­ளுக்­குச் சிறு­தா­னி­யங் களை­யும் செக்கு எண்­ணெய் வகை­க­ளை­யும் பயன்­ப­டுத்­த­லாம் என்­றார் திலகா. இவற்­றைத் தவிர, முடிந்­த­வரை பல­கா­ரத் தட்­டு­களில் பல வண்­ணப் பழங்­க­ளைச் சேர்த்­துக்கொள்­வது நல்­லது என்­றும் ஆலோ­ச­கர்­கள் கூறி­னர்.

இறு­தி­யில் தீபா­வ­ளிப் பர­ப­ரப்­பில் தண்­ணீரை மறந்­து­விட வேண்­டாம். உடலில் சேரும் சர்க்கரை, கொழுப்பை வெளியேற்ற அது முக்கியம் என்றனர் ஆலோசகர்கள்.