கவிமாலை அமைப்பு நாளை நடத்தும் 257வது சந்திப்பில் புகழ்பெற்ற தமிழ் நவீனக் கவிஞர் கலாப்ரியா கலந்துகொள்ளவிருக்கிறார்.
நாளை 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஸூம் செயலி வழியாக நிகழ்ச்சி நடைபெறும்.
சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை இந்த மாதாந்திரச் சந்திப்பை நடத்தி வருகிறது.
"அனிச்சம், தண்ணீர் சிறகுகள், பேனாவுக்குள் அலையாடும் கவிதைகள்" உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியுள்ள கவிஞர் கலாப்ரியா, நிகழ்வில் சிறப்புரையாற்றுவார். அவருடனான கலந்துரையாடல் அங்கமும் உண்டு.
நிகழ்ச்சியில் கவிஞர் சர்வான் ஒருங்கிணைப்பு செய்ய, தங்களுக்குப் பிடித்த கலாப்ரியா கவிதைகளின் வரிகளை மாணவர்கள் வாசிப்பார்கள்.
"இயல்பின்றித் தவிக்கும் வீடு" எனும் தலைப்பிலான இம்மாதக் கவிதைப் போட்டிக் கவிதைகள் விமர்சனமும் இடம்பெறவிருக்கிறது. இணையம் வழி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
ஸூம் சந்திப்பு எண்: 238 635 9660 (கடவு எண் இல்லை)

