செண்ட்ரியம் ஸ்குவேரில் மலபார் கோல்ட் கிளை

செண்ட்ரியம் ஸ்குவேரில் மலபார் கோல்ட் கிளை

2 mins read
57ed8aeb-c85e-4836-8963-5165a07e01c1
மல­பார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம், 320, சிராங்கூன் சாலையில் உள்ள செண்ட்ரியம் ஸ்குவேரில் அதன் 3வது சிங்கப்பூர்க் கிளையைத் திறந்துள்ளது.படம்: மல­பார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் -

மல­பார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறு­வ­னத்­தின் மூன்­றா­வது சிங்­கப்­பூர் கிளை, கடந்த 20ஆம் தேதி. 320, சிராங்­கூன் சாலை­யில் உள்ள செண்ட்­ரி­யம் ஸ்கு­வே­ரில் திறக்­கப்­பட்­டுள்­ளது. கடைத் திறப்பை முன்­னிட்டு அங்கு சிறப்­புப் பரி­சு­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக, $1,000 மதிப்­புள்ள தங்க, ரத்­தின நகை­களை வாங்கு ­வோ­ருக்கு அரை கிராம் தங்க நாண­யம் பரி­சாக வழங்­கப்­படும்.

அதே போல், $1,500 மதிப்­புள்ள தங்க, ரத்­தின நகை­களை வாங்­கு­வோ­ருக்கு ஒரு கிராம் தங்க நாண­யம் வழங்கப்படும்.

இந்­தச் சிறப்­புச் சலுகை மல­பார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறு­வ­னத்­தின் எல்லா கிளை­க­ளி­லும் வரும் நவம்­பர் 4ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும்.

புதிய கிளையை மல­பார் குழு­மத்­தின் தலை­வர் திரு எம்பி அஹ­மது கடந்த 20ஆம் தேதி புதன்­கி­ழமை, இணை­யம் வழி­யா­கத் திறந்து வைத்­தார்.

அதி­க­ரித்து வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும் தங்­கள் நகை­ களுக்­காக உயர்ந்து வரும் தேவை­யை­யும் கருத்­தில் கொண்டு இங்கு மூன்­றா­வது கிளையைத் திறந்­த­தாக மல­பார் கோல்ட் நிறு­வ­னம் கூறி­யது.

வியக்க வைக்­கும் அழ­கை­யும் என்­றும் பொருந்­தக்கூடிய வடி­வ­மைப்­பு­க­ளை­யும் கொண்ட பாரம்­ப­ரிய, நவீன நகை­கள் புதிய செண்ட்­ரி­யம் ஸ்கு­வேர் கிளை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

நிறு­வ­னம் முத்­திரை பதித்­துள்ள திரு­மண நகை­களும் 20 நாடு­க­ளைச் சேர்ந்த புது­வித தங்க, வைர, ரத்­தின நகை­களும் மல­பார் கோல்­டின் புதிய கிளையில் கிடைக்­கும்.

பத்து நாடு­களில் 260க்கும் மேற்­பட்ட நகைக்­க­டை­களை வைத்­துள்ள மல­பார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், இவ்­வாண்டு இறு­திக்­குள் மலே­சி­யா­வில் இரண்டு புதிய கிளை­க­ளைத் திறக்­கத் திட்­ட­மி­டு­கிறது.