ஆய்வுக் கூடத்தில் உருவான காப்பி தூள்

ஆய்வுக் கூடத்தில் உருவான காப்பி தூள்

1 mins read
Google News Preferred Icon

ஃபின்லாந்து ஆய்வாளர்கள் ஆய்வுக் கூடத்தில் சுற்றுச் சூழலுக்கு உகந்த காபியை வளர்த்துள்ளனர்.

'விடிடி' எனப்படும் தொழில்நுட்ப ஆய்வு நிலையத்தின் நிபுணர்கள், காபிச் செடியின் அணுக்களிலிருந்து காபியை உருவாக்கியுள்ளனர்.

உயிரியல் உலையில் வெப்பநிலை, ஒளி அளவு. உயிர்வாயு ஆகியவற்றைக் கட்டுபடுத்தி அது வளர்க்கப்பட்டது.

விலங்குகளைக் கொல்லாது ஆய்வுக் கூடங்களில் இறைச்சி வகைகளைத் தயாரிக்க பயன்படும் அதே தொழில்நுட்பத்தை இந்த ஆய்வாளர்களும் பயன்படுத்தியுள்ளனர்.

காபி தூளைத் தயாரிப்பதில் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு இதில் குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் காப்பி தூளைச் சுவைத்தபோதும் யாரும் இன்னும் அதை விழுங்கவில்லை என்று அவர்கள் கூறினர்.