விமான நிலையத்தில் மேலும் பகுதிகளை திறக்க பரிசீலனை

விமான நிலையத்தில் மேலும் பகுதிகளை திறக்க பரிசீலனை

3 mins read
6e8e738c-53dc-4435-bd4f-792e1b7b3a58
சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று சாங்கி விமான நிலையம் சென்றிருந்தார். அங்கு அவர் ஊழியர்களுடன் உரையாடினார். படம்: உள்துறை அமைச்சு -

தனிமை உத்­த­ர­வில்லா பய­ணத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­வ­தன் கார­ண­மாக பய­ணி­கள் வருகை அதி­க­ரிக்­கும்.

இதைக் கருத்­தில்­கொண்டு குடி­ந­ழைவு அனு­மதி நடை­மு­றையை வேகப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில், சாங்கி விமான நிலை­யத்­தில் மேலும் பல பகு­தி­க­ளைத் திறந்து விடமுடி­யும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்­துள்ளார்.

ஒரே நேரத்­தில் பல விமா­னங்­கள் தரை­யி­றங்­கும் பட்­சத்­தில், பயணி­கள் தேக்­கத்­தைக் குறைக்­கும் வகை­யில் இதர குடி­நு­ழை­வுக் கூடங்­க­ளுக்­குப் பய­ணி­க­ளைத் திருப்­பி­வி­டு­வது குறித்து சாங்கி விமா­ன­ நி­லையக் குழு­மத்­து­டன் சேர்ந்து குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் செயல்­படும்.

இந்த ஆணை­யம், சாங்கி விமான நிலை­யத்­தில் இம்­மா­தம் 29ஆம் தேதி முதல் தானி­யங்கி அனு­மதி இயந்திர வழி­களை திறந்­தி­ருக்­கிறது. அதன்மூலம் சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் வேக­மாக அனு­மதி பெற்று உள்ளே வர இய­லும்.

பயணி ஒரு­வர் விமான நிலை­யத்­தில் இருந்து வெளி­வ­ரு­வ­தற்கு தேவைப்­ப­டக்­கூ­டிய ஒட்­டு­மொத்த நேரம், கொவிட்-19 தொற்­றுக்கு முன்பு இருந்த அள­வுக்குக் குறைந்து­வி­டும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார். திரு சண்­மு­கம், நேற்­றுக் காலை விமான நிலை­யத்­திற்­குச் சென்­றி­ருந்­தார். அதற்கு பிறகு மெய்­நி­கரில் செய்­தி­யா­ளர்­களுக்­குப் பேட்­டி­ய­ளித்­தார்.

பல விமா­னங்­களும் ஒரே நேரத்­தில் தரை­யி­றங்­கும்­போது பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும். அவர்­க­ளின் பத்­தி­ரங்­க­ளைப் பரி­சோ­தித்து அனு­மதி வழங்­கு­வ­தற்கு நேர­மா­கக்­கூ­டும் என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­க­ளு­டன் கூடிய தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான எட்டு புதிய பயண ஏற்­பா­டு­கள் (விடி­எல்) இந்த மாதம் தொடங்­கு­கின்­றன.

இவற்­றின் விளை­வாக சிங்­கப்­பூ­ருக்கு அதிக பய­ணி­கள் வரு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இத்­த­கைய ஒரு நிலை­யில் குடி­நு­ழைவு நடை­மு­றை­கள் செம்­மை­யா­கச் சீர­மைக்­கப்­ப­டு­கின்­றன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்­கான பயண ஏற்­பாட்­டின் மூலம் நான்கு விமா­னங்­களில் வந்­தி­றங்­கிய பய­ணி­கள், குடி­நு­ழைவு முகப்­பு­க­ளி­டம் அனு­மதி பெற்­றதை திரு சண்­மு­கம் விமான நிலை­யத்­தில் நேர­டி­யா­கப் பார்த்­தார்.

இணை­யம் மூலம் விவ­ரங்­களை ஏற்­கெ­னவே தெரி­வித்து இருந்த பய­ணி­கள், தானி­யக்க வழி­கள் மூலம் ஏறத்­தாழ 20 முதல் 30 வினா­டி­க­ளுக்­குள் அனு­ம­தி­பெற்று வெளியே வந்­து­விட்­டார்­கள்.

அத்­த­கைய தானி­யக்கி இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யாத பய­ணி­கள் குடி­நு­ழைவு முகப்­பு­கள் மூலம் அனு­ம­தியைப் பெற ஏறத்­தாழ எட்டு முதல் 10 நிமி­டங்­கள் ஆக­லாம் என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார். ஆனால் ஒரே நேரத்­தில் பல விமா­னங்­கள் தரை­யி­றங்­கும்­போது குடி­நு­ழைவு அனு­மதி பெற நீண்ட நேரம் ஆகும் வாய்ப்­புள்­ளது.

சென்ற வாரம் இத்­த­கைய ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­தது. ஒரே நேரத்­தில் ஐந்து விமா­னங்­கள் தரை­யிறங்­கி­ய­தால் பய­ணி­கள் அனு­மதி பெற்று உள்ளே வர ஏறக்­கு­றைய 90 நிமி­டங்­கள் பிடித்­தது என்­பதை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

கொவிட்-19 தொற்­றுக்கு முன்பு பய­ணி­களை வெவ்­வே­றான குடி­நு­ழைவுப் பகு­தி­க­ளுக்கு அல்­லது விமான நிலை­யத்­தின் இதர பகுதி­களுக்குப் பிரித்து அனுப்­பும் வசதி இருந்­தது. இப்­போது சிர­மங்­கள் அதி­க­ரித்து இருக்­கின்­றன என்­பதை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

இப்­போது விமான நிலைய முனை­யம் 1, முனை­யம் 3 ஆகியவை மட்­டுமே செயல்­ப­டு­கின்­றன.

அதிக தொற்று ஆபத்­துள்ள நாடு­களில் இருந்து வரு­கின்ற பயணி­களைத் தனி­மைப்­ப­டுத்­து­வதற்­கான ஏற்­பா­டு­களும் விமான நிலை­யத்­தில் இருக்­கின்­றன.

தடுப்­பூசி சான்­றி­த­ழில் வேறு­பாடு­கள் இருப்­ப­தன் கார­ண­மாக சிங்­கப்­பூ­ருக்­குள் வர சில பய­ணி­களுக்குப் பிரச்­சி­னை­கள் உள்­ளன. விமான நிலை­யத்­தின் இதர பகுதி­களைத் திறந்­து­விட முடி­யுமா என்­பது குறித்­தும் ஒரே மாதி­ரி­யான நடை­மு­றை­களைக் கொண்­டி­ருப்­பது குறித்­தும் ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

வரு­வ­தற்கு முன்பே தேவை­யான ஆவ­ணங்­களைப் பூர்த்தி செய்ய வேண்­டிய தேவை இருக்­கிறது என்­பதை இப்­போது பய­ணி­கள் நன்கு தெரிந்­து­கொண்டு இருப்­பார்­கள் என்­றும் அவர் கூறி­னார்.

தனிமை உத்­த­ரவு இல்லா பயண ஏற்­பாட்­டின்­கீழ், வரு­வோர் சிங்­கப்­பூ­ரில் தரை­யி­றங்­கி­ய­தும் கொவிட்-19 பரி­சோ­தனையைச் செய்­து­கொள்ள வேண்­டிய நிபந்­தனை உள்­ளது. இது பற்றி கருத்­து­கூறி அமைச்­சர், இதற்கு 20 முதல் 30 நிமி­டங்­கள் ஆகும் என்­றார்.