தடுப்பூசி போட்ட முதியோர்க்கு மக்கள் கழக நிகழ்ச்சிகள்; நவம்பர் 1 முதல் அனுமதி

தடுப்பூசி போட்ட முதியோர்க்கு மக்கள் கழக நிகழ்ச்சிகள்; நவம்பர் 1 முதல் அனுமதி

2 mins read

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள முதி­ய­வர்­கள் மக்­கள் கழ­கத்­தின் குறிப்­பிட்ட வகுப்­பு­க­ளி­லும் நிகழ்வு­களிலும் நவம்­பர் 1 முதல் கலந்­து­கொள்ள லாம். நட­னங்­கள், நாற்­காலி­யில் அமர்ந்­த­படி செய்­யும் யோகா போன்றவை இவற்­றில் அடங்­கும்.

முதி­ய­வர்­கள் பாது­காப்­பான சூழ்­நி­லை­யில் உடல்­ந­லத்­தோ­டும் சுறு­சு­றுப்­போ­டும் சமூ­கப் பிணைப்பு­களைப் புதுப்­பித்­துக்­கொண்­டும் துடிப்­பு­டன் இருந்து வரு­வ­தற்கு ஏது­வாக குறிப்­பிட்ட செயல்­திட்­டங்­கள் மீண்­டும் தொடங்­கும் என்று மக்­கள் கழ­கம் நேற்று அறி­வித்­தது.

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு இந்த வாய்ப்பு கிட்­டாது என்­றும் மக்­கள் கழ­கம் தெரி­வித்­தது.

வண்­ணப் பசை ஓவி­யங்­கள், பொழு­து­போக்கு கிரா­மிய நட­னங்­கள், திரைப்­ப­டங்­க­ளைப் பார்ப்­பது, இசை நிகழ்ச்­சி­களைக் கண்­டு­களிப்­பது போன்­ற­வற்­றில் முதி­ய­வர்­கள் கலந்­து­கொள்­ள­லாம்.

இந்த வசதி அவர்­க­ளுக்கு 21 சமூக நிலை­யங்­க­ளி­லும் மன்­றங்­களி­லும் ஒருங்­கி­ணைந்த சமூக மையங்­க­ளி­லும் திறந்த இடங்­களில் அல்­லது காற்­றோட்­ட­மிக்க இடங்­களிலும் கிடைக்­கும். பாது­காப்பு நிபந்­த­னை­கள் நடப்­பில் இருக்­கும்.

முகக்­க­வ­சம் இல்­லா­மல் உள்­ளரங்கு வகுப்­பு­களில் 30 பேர் வரை கலந்­து­கொள்­ள­லாம். என்­றா­லும் இரு­வர் இரு­வ­ரா­கத்­தான் பங்­கேற்க முடி­யும்.

முகக்­க­வ­சங்­க­ளு­டன் கூடிய உள்­ள­ரங்கு நிகழ்ச்­சி­களில் 50 பேர் வரை அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

முதி­ய­வர்­கள் உடற்­ப­யிற்சி போன்ற முகக்­க­வ­சம் இல்­லாத செயல்­களில் கலந்­து­கொள்­வ­தற்கு முன்­ன­தாக அவர்­க­ளுக்குத் தொற்று இல்லை என்­பதை பரி­சோ­தனை மூலம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.

என்­றா­லும் பாடல், இசைக் கருவி­களை வாசிப்­பது, பேச்­சுப் பயிற்சி போன்ற முகக்­க­வ­சம் இல்­லாத உள்­ள­ரங்கு நிகழ்ச்­சி­க­ளுக்கு இப்­போது அனு­மதி இருக்­காது.

கர­வோக்கே பாடல் வகுப்­பு­கள், சது­ரங்க விளை­யாட்டு போன்ற சாத­னங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டிய வகுப்­பு­களும் இப்­போது தொடங்­காது என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மக்­கள் கழ­கம் நில­வ­ரங்­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து முதி­யோ­ருக்­கான இந்த ஏற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்­து­வது குறித்து முடிவு செய்­யும்.