வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் டெல்டா பிளஸ் கிருமியும் சிங்கப்பூருக்குள் நுழைந்தது; வேறு யாருக்கும் தொற்றவில்லை

வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் டெல்டா பிளஸ் கிருமியும் சிங்கப்பூருக்குள் நுழைந்தது; வேறு யாருக்கும் தொற்றவில்லை

2 mins read

வெளி­நாட்­டில் இருந்து சிங்­கப்­பூருக்கு வந்த ஒரு­வ­ரு­டன் டெல்டா பிளஸ் (ஏஒய்.4.2) என்ற புதிய கொவிட்-19 கிரு­மி­யும் செவ்­வாய்க்­கி­ழமை இறக்­கு­ம­தி­யாகி இருக்­கிறது என்­பது உறு­தி­பட தெரிய வந்துள்­ள­தாக சுகாதார அமைச்சு தெரிவித்­துள்­ளது.

டெல்டா பிளஸ் என்பது டெல்டா என்ற கிருமி திரிந்து உரு­வான கிரு­மி­யா­கும். டெல்டா பிளஸ் கிருமி புதுவகைக் கிருமி இல்லை என்றும் அது உருமாறிய 'டெல்டா' கிருமியின் துணைமாற்றுரு என்றும் அமைச்சு விளக்கியது.

இங்கு வந்த அந்த ஒரு­வ­ரி­டம் இருந்து வேறு யாருக்­கும் புதிய டெல்டா பிளஸ் கிருமி பர­வ­வில்லை என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

டெல்டா பிளஸ் கிருமி எந்த அள­வுக்கு வேக­மா­கப் பர­வும் என்பதும் அது எந்த அள­வுக்­குப் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பதும் இனி­மேல்­தான் தெரி­யவரும். இது பற்றி ஆரா­யப்­பட்டு வரு­கிறது.

இருந்­தா­லும்­கூட டெல்டா பிளஸ் கிருமி, இதர சில டெல்டா வகை கிருமி­களைப்போல அதே அளவு வீரி­யத்­து­டன் இருக்­கும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

டெல்டா பிளஸ் கிருமி அவ்­வ­ள­வாக கவலை தரும் அள­வுக்கு விளை­வு­களை ஏற்­ப­டுத்­தாது என்று உலக சுகா­தார நிறு­வ­னம் கணித்து உள்­ளது.

டெல்டா கிருமி அள­வுக்கு டெல்டா பிளஸ் மோச­மா­ன­தாக இருக்­காது என்றே வல்­லு­நர்­கள் கூறு­வ­தாக பிபிசி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இருந்­தா­லும் இன்­ன­மும் ஆய்வு­கள் நடந்து வரு­கின்­றன. இது­வரை டெல்டா பிளஸ் தொற்றியோரில் 6 விழுக்­காட்­டி­னர் பிரிட்­ட­னில் இருக்­கி­றார்­கள்.

அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளி­லும் மேற்கு ஐரோப்­பிய பகு­திக­ளி­லும் இந்­தப் புதிய வகைக் கிருமி தலை­காட்டி இருப்பதாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னி­டையே, டெல்டா பிளஸ் பற்றி கருத்துக் கூறிய லண்­டன் பல்­க­லைக்­க­ழ­கக் கல்­லூரிப் பேரா­சி­ரி­யர் பிரான்­கி­யோஸ் பாலோக்ஸ், டெல்டா பிளஸ் கிருமி, இதர ஆல்ஃபா, டெல்டா கிருமி அளவுக்கு வீரி­ய­மிக்­க­தாக இருக்­காது என்றே தெரி­வ­தா­கவும் இருந்­தா­லும் அதைக் கண்­கா­ணிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் கூறினார்.