இந்தோனீசியத் தலைமைத் தளபதிக்கு ஆக உயரிய விருது

இந்தோனீசியத் தலைமைத் தளபதிக்கு ஆக உயரிய விருது

1 mins read

இந்­தோ­னீ­சிய ஆயு­தப்­ப­டை­க­ளின் தலைமைத் தள­ப­திக்கு சிங்­கப்­பூரின் ஆக உய­ரிய ராணுவ விருது வழங்­கப்­பட்டு இருக்­கிறது.

இந்­தோ­னீ­சிய ஏர் சீஃப் மார்ஷல் ஹாடி ஜஜாந்­தோ­வுக்கு நேற்று இஸ்­தா­னா­வில் நடந்த நிகழ்ச்­சியில் தனிச் சிறப்பு­மிக்க சேவை விருதை (ராணு­வம்) வழங்கி அதி­பர் ஹலிமா யாக்­கோப் சிறப்­பித்­தார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­க­ளுக்­கும் இந்­தோ­னீ­சிய ஆயு­தப் படை­களுக்­கும் இடை­யில் நீண்ட நெடு­நாட்­க­ளாக இருந்து வரும் தற்­காப்பு உற­வு­க­ளைப் பலப்­ப­டுத்­து­வ­தில் குறிப்­பி­டத்­தக்க தொண்­டாற்­றி­ய­தற்­காக அவ­ருக்கு இந்த விருது வழங்­கிச் சிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

ஏர் சீஃப் மார்ஷல் ஹாடி­யின் தலை­மைத்­து­வத்­தின் கீழ் இரு நாடு­க­ளின் ராணு­வங்­களும் ஒத்­து­ழைப்பை ஆழப்­ப­டுத்­தின.

படை­வீ­ரர்­க­ளுக்கு இடை­யில் அணுக்க உறவு பேணி பலப்­படுத்­தப்­பட்­டதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

மலாக்கா நீரிணை சுற்­றுக் காவல், பயங்­க­ர­வாத எதிர்ப்பு தக­வல் ஏற்­பா­டு­கள் போன்ற பல­த­ரப்பு ஏற்­பா­டு­கள் மூலம் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­களும் இந்­தோ­னீ­சிய ஆயு­தப் படை­களும் சேர்ந்து செயல்­பட்டு வட்­டா­ரப் பாது­காப்பு ஒத்­துழைப்பை மேம்­ப­டுத்த எடுத்த முயற்­சி­க­ளுக்கு இந்­தோ­னீ­சிய தலை­மைத் தள­பதி ஆத­ரவு வழங்கி இருக்­கி­றார் என்­றும் அறிக்கை தெரிவித்தது.