நிலப் போக்குவரத்து ஆணையத்தில் ரயில் பிரிவின் புதிய தலைவராக இங் கீ நாம், 63, நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர், திரு சிம் வீ மெங்கிடம் இருந்து இந்தப் பொறுப்பை அக்டோபர் 1 முதல் ஏற்று இருக்கிறார்.
திரு இங், தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் மற்றும் குறுக்குத் தீவு வழித்தடங்களின் குழு இயக்குநராகப் பணியாற்றுவார்.
மிகவும் சிரமமான ஒரு காலகட்டத்தில் திரு இங் இப்பொறுப்பை மேற்கொள்வதாக கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆணையத்தில் ஏற்கெனவே ரயில் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வகித்தவரான திரு ராஜன் கிருஷ்ணன், 70, புதிய பொறுப்பை ஏற்க திரு இங் மிகவும் பொருத்தமானவர் என்றார்.

