இயற்கை இழைகளில் எழில்மிகு சேலைகள்

இயற்கை இழைகளில் எழில்மிகு சேலைகள்

3 mins read
c07c9d73-e74c-4ec5-b630-8f7dce7c2aca
-
multi-img1 of 3

உண்­பது, உடுப்­பது, உறை­வது என வாழ்­வின் அனைத்து அத்­தி­யா­வ­சி­யச் செயல்­பா­டு­க­ளி­லும் நீடித்த நிலைத்­தன்­மை­யைப் பேணு­வ­தி­லும் பூமி வெப்­ப­ம­டை­வ­தைக் குறைப்­ப­தி­லும் ஒவ்­வொ­ரு­வ­ரும் பங்­காற்ற முடி­யும்.

தீபா­வ­ளிக்கு புத்­தாடை வாங்­கும்­போது இயற்­கை­யான பொருட்­க­ளால் நெய்­யப்­பட்ட துணிகளை வாங்­கு­வோம். இந்த உடை­கள் உட­லுக்­கும் நல்­லது, இயற்­கை பாது­காப்­புக்­கும் உகந்­தது.

'ஃபிளெக்ஸ்' செடி­நாரில் நெய்­யப்­படும் லினன், பட்டு, பருத்தி, கம்­பளி போன்ற இயற்கை நூல்­களி­ல் செய்த துணி­கள் அனை­வரும் அறிந்­தவை.

தற்­போது கற்­றாழை, சணல், வாழை, மூங்­கில் போன்­ற­வற்­றின் நார்­க­ளைக் கொண்­டும் அன்­னாசி, சோயா உள்­ளிட்ட பொருட்­களில் இருந்து நூல்­க­ளைத் தயா­ரித்­தும் துணி­கள் நெய்­யப்­ப­டு­கின்­றன.

இது­போன்று இயற்­கை­யா­கக் கிடைக்­கும் தாவ­ரங்­க­ளின் நார்­களி­னால் உரு­வாக்­கப்­படும் துணி­கள் செயற்கை இழை­க­ளால் தயா­ரிக்­கப்­படும் துணி­க­ளைக் காட்­டி­லும் நீண்ட ஆயு­ளைக் கொண்­ட­வை­யாக அறி­யப்­ப­டு­கிறது.

உதா­ர­ணத்­திற்கு, நல்ல பட்­டுத் துணியை முறை­யா­கப் பரா­ம­ரித்­தால் 100 ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கப் பயன்­படுத்­த­லாம்.

இந்த இயற்­கை­யான இழை­களுக்கு வேப்­பிலை, துளசி, வேப்­பம்­பட்டை, மஞ்­சள், சுண்­ணாம்பு, கரி, பீட்­ருட், நாவல் பழம், கேரட், மரத்­தூள், வெல்­லம் போன்ற இயற்­கைப் பொருட்­களில் இருந்து தாய­ரிக்­கப்­படும் வண்­ணங்­களே சேர்க்­கப்­ப­டு­கின்­றன. அத­னால் இவை உட­லுக்கு மிகுந்த நன்மை பயக்­கின்­றன.

பட்­டுச் சேலைக்கு உல­கப் புகழ்­பெற்­ற காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள அன­கா­புத்­தூ­ரில் இருக்கும் 'அன­கா­புத்­தூர் இயற்கை நார் நெசவுக் குழு­மம்', வாழை­நார், மூங்­கில்­நார் போன்ற இயற்­கைப் பொருட்­களைக் கொண்டு, ரசா­ய­னப் பொருட்­கள் இல்லாத படவை, சட்டை போன்ற ஆடை­க­ளைத் தயா­ரிக்­கிறது.

பாரம்­ப­ரி­ய­மிக்க கைத்­தறி நெச­வுக்குப் பெயர் பெற்ற இந்­ந­க­ரத்­தில் 1,000-க்கும் மேற்­பட்ட நெச­வா­ளர் குடும்­பங்­கள் உள்­ளன. ஆனால், சமீ­ப­கா­ல­மாக கைத்­த­றித் தொழில் நசிந்து வரு­வ­தால் 5,000 தறி­கள் இருந்த இடத்­தில் இப்­போது 300 தறி­கள்­தான் இருக்­கின்­றன.

இந்­நி­லை­யில், இயற்கை நார் நெச­வுக் குழு­மம், பருத்தி நூல், பட்டு நூல்களு­டன் வாழை நார் சேர்த்து காட்­டன் சேலை, பட்­டுச் சேலை நெசவு செய்­கிறது.

தனி பருத்தி நூலில் செய்­யப்­படும் சேலை­யை­விட, பருத்தி நூலு­டன் வாழை நார் சேர்த்து தயா­ரிக்­கப்­படும் சேலை உட­லுக்கு அதிக குளிர்ச்சி தரு­வ­தாக அதைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

இங்கே பணி­யாற்­று­ப­வர்­களில் 90% பேர், 'அன்னிபெசன்ட்' மக­ளிர் சுய­ உ­த­விக் குழு­வைச் சேர்ந்த பெண்­கள். சுற்­றுச்­சூ­ழலை மாசு­படுத்­தா­மல் பொருட்­க­ளைத் தயா­ரிப்­ப­ததையும் அதன் மூலம் பெண்­களுக்கு வேலை­வாய்ப்பை அளிப்­பதை­யும் நோக்­க­மா­கக்­கொண்ட இந்த குழு­மம், லிம்கா சாதனை விருது, பரி­வர்த்­தன் விருது, ஜெனிவா அனைத்­து­லக விருது உள்­ளிட்ட பல விரு­து­க­ளை­யும் பெற்­றுள்­ளது.

கற்­றாழை நார்- பச்­சை­யாக இருக்­கும் நார்­களை எளி­மை­யான பிளீச்­சிங் மூலம் சுத்­தம் செய்து அதி­லி­ருக்­கும் கொழுப்­பு­களை அகற்­று­கி­றார்­கள். பின் மென்­மை­யான முறை­யில் ஒற்றை நார்­க­ளாக பிரித்­தெ­டுத்து துணி தயா­ரிக்­கப்­படு­கிறது.

சோற்­றுக்­கற்­றாழை நாரில் நெய்­யப்படும் உடை­கள், தோல் நோய்­களையே குணப்­ப­டுத்­தும்.

சணல் நார் - காய்­க­றிச் செடி­களின் தோல்­க­ளி­லி­ருந்து தயா­ரிக்­கப்­படும் தங்­க­நிற நார்­க­ளா­லும் மறு­சு­ழற்சி செய்­யக்­கூ­டிய சண­லி­னா­லும் மிக­வும் நேர்த்­தி­யா­கத் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது ஜூட் துணி.

மூங்­கில் நார் - மூங்­கி­லின் உட்­பு­ற­மி­ருக்­கும் பகு­தி­யி­லி­ருந்து எடுக்­கப்­படும் நார்­க­ளால் ஆன துணி­கள் ஈரப்பதத்தை விரை­வில் உறிஞ்சி, வெப்­பத்­தைத் தணிக்­கக்­கூ­டி­யவை. கோடைக் காலத்­தில் குளிர்ச்சி தரக்­கூ­டிய மூங்­கில் இழை­க­ளால் ஆன துணி பாக்­டீ­ரி­யாவை எதிர்த்­துப் போரா­டு­வ­தற்­கான ஆற்­ற­லை­யும் கொண்­டவை.

வாழை நார் - செவ்­வாழை, நேந்­தி­ரம், பூவன் வாழை மரங்­களின் பட்­டை­களை உரித்து அதி­லி­ருந்து நாரெ­டுக்­கப்­ப­டு­கிறது. உலர விட்டு, தனித்­தனி இழை­களாக எடுத்து துணி நெய்­யப்­படு­கிறது.

செயற்கை இழை­க­ளின் மிக முக்­கி­ய­மான குழுக்­கள் பாலி­மை­டு­கள், பாலி­யஸ்­டர், பாலி­அக்­ரி­லிக்ஸ், குளோ­ரைடு இழை­கள் ஆகும்.

இவை பொது­வாக எடை குறை­வா­ன­வை­யாக, எளி­தில் கிழிந்து விடாத வலிமை கொண்­ட­தாக இருக்­கும். ஆர்ட் சில்க், பாலியஸ்­டர் துணி­கள் இந்த ரகத்­தைச் சேர்ந்­தவை. இவை ஈரப்­ப­தத்தை உறிஞ்­சாது. அத­னால் இவற்­றைத் துவைப்­ப­தும் காய­வைப்­ப­தும் எளிது.

அதே­நே­ரத்­தில், காற்­றோட்­டம் இல்­லா­த­தால் உடலை வெப்­ப­மாக்­கும், அணிய வச­தி­யாக இருக்­காது. சில­ருக்கு இத்­த­கைய செயற்கை இழைத் துணி­க­ளால் தோல் எரிச்­சல், சளி, அரிப்பு போன்ற சில ஒவ்­வா­மை­கள் ஏற்­படும்.

எனவே, உடை­கள், மெத்தை, தலை­யணை உறை, துண்­டு­கள், திரைச் சீலை என எதை வாங்­கி­னா­லும் அத்­துணி எத­னால் ஆனது என்­ப­தைத் தெரிந்­து­கொண்டு வாங்­கு­வது உடலுக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும்.