இன்றைய வெற்றி இந்தியாவுக்கு அவசியம்

இன்றைய வெற்றி இந்தியாவுக்கு அவசியம்

2 mins read

துபாய்: இரு­பது ஓவர் உல­கக் கிண்ண ஆட்­டத்­தில் இன்­றி­ரவு இந்­தி­யா­வும் நியூ­சி­லாந்­தும் மோதும் ஆட்­டம் கிரிக்­கெட் ரசி­கர்­க­ளி­டையே பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. பாகிஸ்­தா­னி­டம் தோல்­வியுற்ற இந்­தி­யா­வுக்­கும் நியூ­சி­லாந்­துக்­கும் இப்­போட்டி கிட்­டத்­தட்ட வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இப்­போட்­டி­யில் இந்­திய அணி வெற்றி பெற்­றால் மட்­டுமே அரை­யி­றுதி வாய்ப்பை அந்த அணி­யால் உறு­தி­செய்ய முடி­யும்.

அனைத்­து­ல­கப் போட்­டி­களில் நியூ­சி­லாந்­தி­டம் தொடர்ந்து தோல்­வி­யையே இந்­தியா சந்­தித்து வந்­துள்­ள­தால் இன்­றும் அது தொட­ருமோ என்ற கவலை இந்­திய ரசி­கர்­கள் மத்­தி­யில் நில­வு­கிறது.

அப்­படி நிகழ்ந்­தால் இந்­தி­யா­வின் உல­கக் கிண்ண கன­வு தகரும் நிலை ஏற்படலாம். இரு­பது ஓவர் உல­கக் கிண்­ணத்தை 2007ஆம் ஆண்டு இந்­தியா வென்­ற­ போது கூட லீக் ஆட்­டத்­தில் நியூ­சி­லாந்­தி­டம் அது தோல்­வி­யைத் தழுவி இருந்­தது.

2016ஆம் ஆண்டின் இரு­பது ஓவர் உல­கக் கிண்ண ஆட்­டத்­தி­லும் இந்­தி­யாவை நியூ­சி­லாந்து வீழ்த்­தி­யது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒரு­நாள் உல­கக் கிண்ண ஆட்­டத்­தி­லும் அரைஇறு­தி­யில் 18 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் இந்­தி­யாவை நியூ­சி­லாந்து வென்­றது. இந்­தத் தொடர் தோல்­விக்கு இன்று இந்­தியா முற்­றுப்­புள்ளி வைக்­கும் என்ற எதிர்­பார்ப்பு மிகுந்­துள்­ளது. அனைத்­து­ல­கப் போட்­டி­களில் இந்­தி­யாவை பாகிஸ்­தான் வெல்­லும் அதி­ச­யம் நிகழ்ந்­தி­ருக்­கும் வேளை­யில் நியூ­சி­லாந்தை இந்­தியா வெல்­லும் அதி­ச­ய­மும் நிக­ழும் என முன்­னணி கிரிக்­கெட் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

அதற்கு ஒரு கார­ணத்­தை­யும் அவர்­கள் கூறு­கின்­ற­னர். இரு­பது ஓவர் போட்­டி­களில் இரு அணி­களும் 16 முறை மோதி­ய­போ­தும் ஆறு முறை இந்­தியா வென்­றுள்­ளது. மேலும், தற்­போது நியூ

­சி­லாந்­தின் சில முன்­னணி வீரர்­கள் காயத்­தால் அவ­திப்­ப­டு­கின்­ற­னர். அதே­நேரம் இந்­திய அணி முழு வலி­மை­யோடு உள்­ளது.

இந்­திய அணி­யில் ரோகித் சர்மா, ராகுல், விராத் கோஹ்லி, சூர்­ய­கு­மார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்­திக் பாண்ட்யா, ரவீந்­திர ஜடேஜா, ஷர்­துல் தாக்­கூர், வருண் சக்­ர­வர்த்தி, பும்ரா, ஷமி ஆகி­யோர் கள­மி­றங்க வாய்ப்­புள்­ள­து.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பாகிஸ்­தான் அணிக்கு எதி­ரான ஆட்­டத்­தில் ஆல்­ர­வுண்­ட­ரான ஹர்­திக் பாண்­டியா சொதப்­பி­யது கடும் விமர்­ச­னங்­க­ளைக் கிளப்­பி­யது. முக்­கி­ய­மான கட்­டத்­தில் ஆடத்­தொ­டங்­கிய அவர், 8 பந்­து­ களில் 11 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்து ஏமாற்­ற­ம­ளித்­தார். மேலும், காயம் கார­ண­மாக அவர் பந்­து­வீச்­சி­லும் ஈடு­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், இந்­திய அணி­யின் வெற்­றிக்கு ரவிச்­சந்­தி­ரன் அஸ்­வி­னின் அனு­ப­வம் கைகொ­டுக்­கும் என்று முன்­னாள் ஆஸ்தி ரேலிய கிரிக்­கெட் வீரர் பிரட் லீ தெரி­வித்­துள்­ளார். "அஸ்­வின் பல டி20 போட்­டி­களில் விளை­யாடி இருப்­ப­தால் அவ­ரு­டைய அனு­

ப­வம் அணிக்கு உத­வி­யாக இருக்­கும். எனவே நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான போட்­டி­யில் அஸ்­வி­னைக் கள­மி­றக்க வேண்­டும்," என அவர் பரிந்­து­ரைத்­துள்­ளார். பாகிஸ்­

தா­னு­டன் மோதிய ஆட்டத்தில் இந்­திய அணி­யில் அஸ்­வின் இடம்­பெ­றாதது சுட்டிக்காட்டப்பட்டது.