கிறிஸ்டியன் எரிக்சனுக்கு பெருத்த ஏமாற்றம்

கிறிஸ்டியன் எரிக்சனுக்கு பெருத்த ஏமாற்றம்

2 mins read

மிலான்: டென்­மார்க் தேசிய காற்­பந்­துக் குழு­வின் மத்திய திடல் ஆட்­டக்­கா­ர­ரான கிறிஸ்­டி­யன் எரிக்­சன் (படம்) தாம் விளை­யா­டும் இத்­தாலி காற்­பந்­துக் குழு­வான இண்­டர் மிலா­னுக்கு இந்­தக் காற்­பந்து பரு­வம் முழு­வ­தும் விளை­யாட முடி­யாது என்று அந்­தக் காற்­பந்­துச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற யூரோ 2020 காற்­பந்­துப் போட்­டி­க­ளின் ஓர் ஆட்­டத்­தின்­போது அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­ட­தா­ல் திட­லி­லும் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யி­லும் அவருக்கு அவ­சர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

டென்­மார்க்­குக்­கும் ஃபின்லாந்­துக்­கும் இடை­யி­லான அந்த ஆட்­டத்­தில் 29 வயது எரிக்­சன் மார­டைப்­பால் மயங்கி விழுந்­த­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் அவ­ருக்கு 'ஐசிடி' எனும் இதய இயக்­கக் கருவி பொருத்­தப்­பட்­டது.

இதன் கார­ண­மா­கத்­தான் இண்­டர் மிலான் காற்­பந்­துச் சங்­கம் தற்போதையை அறி­விப்பை வெளியிட்டுள்ளது.

இந்­தக் காற்­பந்­துப் பரு­வத்­தில் அவர் விளை­யாட அனு­

ம­திக்­கப்­பட மாட்­டார் என்னும் கார­ணத்­தால் அவர் வேறொரு குழு­வுக்கு விளை­யா­ட­லாம் என்று அது கூறி­யது.

இத்­தா­லிய மருத்­துவ ஆணை­யம் எரிக்­சன் தொடர்ந்து இத்­தா­லி­யில் விளை­யா­டு­வ­தற்கு தடை விதித்­துள்­ளது.

மார­டைப்பு ஏற்­பட்டு செயற்கை இதய இயக்­கக் கருவி பொருத்­தப்­பட்­டுள்ள ஒரு­வர் இத்­தா­லி­யில் விளை­யாடு­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்ட கார­ணத்தை மேற்­கோள் காட்டி மற்ற நாடு­களும் அவரை விளை­யாட அனு­ம­திக்­கா­மல் போக­லாம் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

எந்­தெந்த நாடு­களில் இத்­த­கைய விதி­முறை உள்­ளது என்­பது தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­வுக்கு முன்பு விளை­யா­டிய டேலி பிலிண்ட்­டுக்கு இத­யத்­தில் தசை அழற்சி பிரச்­சினை இருந்­த­தால் அவ­ருக்­கும் 'ஐசிடி' பொருத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால் அவர் முழு­மை­

யா­கக் குண­மாகி, நெதர்­லாந்­தின் லீக் குழு­வான அயக்ஸ் ஆம்ஸ்­ட­டாம் குழு­வுக்­கும் நெதர்­லாந்து தேசிய குழு­வுக்­கும் தொடர்ந்து விளை­யாடி வரு­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கின் மற்­றொரு குழு­வான டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர்ஸ் குழு­வுக்­காக ஆறரை காற்­பந்­துப் பரு­வம் விளை­யா­டிய எரிக்­சன், அக்­குழு 2019 சாம்­பி­யன்ஸ் லீக் இறு­திப் போட்­டி­யில் லிவர்­பூல் குழு­வு­டன் விளை­யா­டிய ஆட்­டத்­தில் அங்­கம் வகித்­தார்.

பின்­னர் 2020 ஜன­வரி மாதத்­தில் இண்­டர் மிலான் குழு எரிக்­சனை 16.9 மில்­லி­யன் பவுண்ட்ஸ் விலை கொடுத்து வாங்­கி­யது.