சைடன் (லெபனான்): ஆசிய கண்டத்திற்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றில் இரண்டு பிரிவுகளிலும் ஆகக் கடைசி நிலவரப்படி இரண்டாம் இடத்துக்கான போட்டி அதிகரிக்கக்கூடும். குறிப்பாக பி பிரிவில் சவூதி அரேபியாவை முதலிடத்திலிருந்து அகற்றுவது மிகவும் சவாலானது.
இரு பிரிவுகளிலும் இறுதியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும்.
ஏ பிரிவில் லெபனானை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று தனது உலகக் கிண்ண வாய்ப்புகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டது ஐக்கிய அரபுச் சிற்றரசுகள். பி பிரிவிலும் கடைசி இடத்தில் உள்ள வியட்நாமை அதே கோல் கணக்கில் வென்றது தொடர்ந்து முதலிடத்தை வகிக்கும் சவூதி அரேபியா.

