உள்ளூர் வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

உள்ளூர் வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

1 mins read
83dd59d5-3c32-4726-a479-d715f499ed06
ஆஸ்திரேலியாவில் அனுபவம் பெற சிங்கப்பூரின் ஆகச் சிறந்த சைக்கிளோட்ட வீரர்களுக்கு வாய்ப்பு.கோப்புப் படம் / ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்: ஆஸ்­தி­ரே­லிய சைக்கிளோட்­டப் பயிற்­சிக் கழ­கத்­து­டன் சிங்­கப்­பூர் சைக்­கி­ளோட்டச் சம்­மே­ள­னம் இணக்­கக் குறிப்பு ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது. இது, சிங்­கப்­பூ­ரின் சைக்­கி­ளோட்ட வீரர்­க­ளின் ஆற்­றலை ேமம்­ப­டுத்த வகை­செய்­யும்.

இந்த ஒப்­பந்­தம் அடுத்த ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடப்­பில் இருக்­கும். ஒப்­பந்­தத்­தின்­கீழ் 'பிரோ­சைக்­ளிங்­எஸ்ஜி' உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டத்­திற்­காக அடுத்த ஆண்டு அதி­கபட்­ச­மாக மூன்று சைக்­கி­ளோட்­டி­களை சிங்­கப்­பூர் சைக்­கி­ளோட்­டச் சம்­மே­ள­னம் தேர்ந்­தெ­டுக்­கும். அவர்­க­ளுக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் உள்­ளூர் சைக்­கி­ளோட்­டப் போட்டி­களில் பங்­கேற்­க­வும் வாய்ப்பு கிட்டும். 2023ஆம் ஆண்­டில் இத்திட்டத்­தில் இடம்­பெற நால்­வர் வரை பரிந்­து­ரைக்­கப்­ப­ட­லாம். தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வோ­ருக்­குப் பயிற்சி நேர­மும் அதி­கம்.