சோல்ஷியா மீது கோபம்

சோல்ஷியா மீது கோபம்

1 mins read

மான்செஸ்டர்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி ஒலே குனா சோல்ஷியா மீது அவ்வணியின் விளையாட்டாளர்கள் சிலர் அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணியில் சில சிறந்த விளையாட்டாளர்களுக்கு சரியான வாய்ப்பை அவர் வழங்கவில்லை என்பது அவர்களின் வாதம் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

டோனி வான் ட பீக், ஆந்தனி மார்சியால். ஜெஸ்ஸி லின்கார்ட், டீன் ஹெண்டர்சன் போன்ற விளையாட்டாளர்கள் அணியில் அதிகம் இடம்பெறுவதில்லை. குறிப்பாக வான் ட பீக்கை சோல்ஷியா அதிகம் விளையாடாமல் வைத்திருப்பது ரசிகர்கள், காற்பந்து விமர்சகர்கள் ஆகியோரின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக யுனைடெட் படுமோசமாக விளையாடியதால் சோல்ஷியா எந்நேரமும் பணிநீக்கம் செய்யப்படுவார் எனச் சொல்லப்பட்டு வருகிறது. கிரிஸ்டியானோ ரொனால்டோ, ஜேடன் சாஞ்சோ, ரஃபாயெல் வரான் போன்ற நட்சத்திரங்களை வாங்கிய பிறகும் அணி இவ்வாறு விளையாடுவது பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அணியின் விளையாட்டாளர்களிடையே ஒற்றுமை இல்லை என்றும் பரவலாகக் கூறப்படுகிறது. மூவாண்டுகளுக்கு முன் யுனைடெட் பிரச்சினையில் மூழ்கிக் கிடந்த சிக்கலான வேளையில் அதன் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் சோல்ஷியா. நிலைமையை சிறப்பாகக் சோல்ஷியா, இதுவரை காணாத சவாலை எதிர்நோக்குகிறார்.