தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை மாதத்தில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு கார்த்திகைத் திருவிழா இன்றைய தினம் அதாவது 19ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு கேலாங் ஸ்ரீ சிவன் கோயிலில் 1,000 தீபங்கள் ஏற்றப்படும் என்றார் ஆலயத்தின் செயலாளர் க.கலையரசன்.