கருவுற்ற மாது ஒருவருக்கு அதற்குமுன் நீரிழிவு இருப்பதன் அறிகுறிகளே இருந்திருக்காது. ஆனால், திடீரென்று அவருக்கு பேறுகால நீரிழிவு ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு மருத்துவர் கூறலாம். கர்ப்பகால உயர் ரத்தஅழுத்தம், எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுடன் குறைப்பிரசவம், பிறப்புறுப்பு சிதைவு, பிரசவத்தில் சிக்கல் ஆகியவையும் ஏற்படலாம். பிரசவத்திற்குப் பின் எடை அதிகரிப்பு, 'டைப்-2' நீரிழிவு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நீண்டகால பாதிப்புகளும் தாய்க்கு நேரக்கூடும். அதிக உடல் எடை, ரத்தச் சர்க்கரைக் குறைவு, மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு போன்ற பாதிப்புகளைப் பிறந்த குழந்தை அனுபவிக்கக்கூடும். எனவே, விரும்பியதை உண்ண வேண்டும் என்று நா அழைத்தாலும், நீண்டகால பாதிப்பை மனதில் கொண்டு மூன்று வேளை மிதமான அளவு உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைத் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
பேறுகால நீரிழிவால் நீண்டகால பாதிப்பு
1 mins read
-

