ஆஸ்ட்ராஸெனகா மருந்து வாங்க அமைச்சு பேச்சு

ஆஸ்ட்ராஸெனகா மருந்து வாங்க அமைச்சு பேச்சு

2 mins read

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிப்­ப­தற்­காக ஆஸ்ட்ரா­ஸெ­னகா நிறு­வ­னத்­தின் நோய் எதிர்ப்பு மருந்தை கொள்முதல் செய்ய சுகா­தார அமைச்சு அந்த நிறு­வ­னத்­து­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

இருந்­தா­லும் அந்­தப் பேச்­சு­வார்த்தை பற்­றிய மேல் விவ­ரங்­களை இப்­போ­தைக்குத் தன்­னால் வெளி­யிட இய­ல­வில்லை என்று அமைச்சு கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

ஆஸ்ட்­ரா­ஸெ­னகா நிறு­வ­னம் தனது AZD7442 மருந்து பற்­றிய பரி­சோ­தனை முடி­வு­களை வியாழக்­கி­ழமை வெளி­யிட்­டது.

நோயா­ளி­யி­டம் கடு­மை­யான பாதிப்பு அல்­லது மர­ணம் ஏற்­படு­வ­தற்­கான ஆபத்­து­களை அந்த மருந்து 88 விழுக்­காடு குறைக்­கிறது என்று அந்­தப் பரி­சோ­தனை முடி­வு­கள் மூலம் தெரி­ய­வந்­தன.

நோய் அறி­குறி தெரி­ய­வந்த பிறகு மூன்று நாட்­க­ளுக்கு அந்த மருந்தை நோயா­ளி­க­ளின் உட­லில் செலுத்­தி­னால் இத்­த­கைய பாது­காப்பு கிடைக்­கிறது என்று அந்த நிறு­வ­னம் அறி­வித்­தது.

அந்த மருந்­தில் இரண்டு நோய் எதிர்ப்பு புர­தங்­கள் இருக்­கின்­றன. அவை நோய் எதிர்ப்­பாற்­றலை உரு­வாக்­கும் வெள்ளை அணுக்­களில் இருந்து பெறப்­ப­டு­கின்­றன.

அந்த அணுக்­கள் குண­மடைந்து வரும் கொவிட்-19 நோயா­ளி­க­ளி­டம் இருந்து பெறப்­படு­ம். ஆஸ்ட்­ரா­ஸெ­னகா மருந்தை சிகிச்­சைக்­குப் பயன்­ப­டுத்­தி­னால் ஓராண்டு காலத்­திற்கு நீடிக்­கும் பாது­காப்பு உட­லில் ஏற்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

முன்­த­டுப்பு நட­வ­டிக்­கை­யாக அதைப் பயன்­ப­டுத்­தி­னால் ஆறு மாதத்­திற்­குப் பாது­காப்பு கிடைக்­கும். லேசா­னது முதல் மித­மான கொவிட்-19 தொற்று இருந்த நோயா­ளி­க­ளி­டம் அந்­தப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அந்த நோயா­ளி­களில் ஏறத்­தாழ 90 விழுக்­காட்­டி­ன­ருக்குப் புற்­று­நோய் அல்­லது நீரி­ழிவு போன்ற பாதிப்­பு­கள் இருந்­தன. 13 நாடு­களைச் சேர்ந்த 900 பேரை உள்­ள­டக்கி 'டேக்­கல்' என்ற அந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

ஆஸ்ட்­ரா­ஸெ­னகா நிறு­வனத்தின் கொவிட்-19 தடுப்­பூசி உல­கம் முழு­வ­தும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

அந்த நிறு­வ­னம் தனது AZD7442 மருந்தை கடும் பாதிப்பு களை முன்­ன­தாகவே தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான மருந்­தாக பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கு­மாறு கேட்டு அமெ­ரிக்க உணவு, மருந்து நிர்­வா­கத் துறைக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.