தனிமை உத்தரவை மீறியதாக இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு

தனிமை உத்தரவை மீறியதாக இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு

1 mins read

வீட்­டி­லேயே தனி­மை­யில் இருக்­க­வேண்­டிய உத்­த­ர­வு­களை மீறி­ய­தாக வெளி­நா­டு­களில் இருந்து திரும்­பிய இரண்டு சிங்­கப்­பூ­ரர்­கள் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

அந்த இரண்டு பேரில், லீ யி ஷெங் டிரைல் பால் என்­ப­வர் ஒரு­வர். அவர் இந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். வீட்­டி­லேயே தனி­மை­யில் இருக்­க­வேண்­டும் என்று அவருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஆனால் லீ அடுத்த சில நாட்­களில் பல முறை வெளியே சென்­றார். லீ தெம்­ப­னிஸ் சாஃப்ரா­வில் முவே தாய் வகுப்­பில் கலந்து­ கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் டிசம்­பர் 10ஆம் தேதி மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­னிலையா­வார்.

குற்­றம் சுமத்­தப்­பட்ட மற்­றொரு­வர் ஜெரா­மிர் சிங் தோவா சிங் என்­ப­வர்.

இவர் ஆகஸ்ட் 27ஆம் தேதி சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். தொற்­று­நோய் சட்­டத்­தின்கீழ் இவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.