சிங்கப்பூர்-மலேசியா விமானப் பயணம்; கவனத்தில் கொள்க

சிங்கப்பூர்-மலேசியா விமானப் பயணம்; கவனத்தில் கொள்க

2 mins read

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசியை முற்­றி­லும் போட்­டுக்­கொண்டு இருக்­கும் மக்­கள் நவம்­பர் 29 முதல் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் விமா னப் பய­ணங்­களை மேற்­கொள்ள­லாம். அவர்­க­ளுக்கு தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டாது.

இந்­தப் பயண ஏற்­பாட்­டின்­கீழ், மலே­சி­யா­வுக்குப் பய­ணம் மேற்­கொள்ள வேண்­டு­மா­னால் ஒரு­வர் முற்­றி­லும் தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும். என்­றா­லும் 12க்கும் குறைந்த வய­துள்ள சிறார்­க­ளுக்கு விதி­விலக்கு உண்டு.

உலக சுகா­தார நிறு­வ­னம் அங்­கீ­க­ரித்து உள்ள தடுப்­பூசி மருந்தை மலே­சி­யா­வும் அங்­கீ­க­ரித்து உள்­ளது. மலே­சி­யா­வுக்குப் புறப்­ப­டு­வதற்கு முன்­பாக ஒரு­வர் சிங்­கப்­பூ­ரிலோ அல்­லது மலே­சி­யா­விலோ தொடர்ந்து 14 நாட்­கள் இருந்து வந்­தி­ருக்­க­வேண்­டும்.

இந்த ஏற்­பாட்­டின்­கீழ், மலே­சியா செல்ல விண்­ணப்­பம் தேவை­யில்லை. இருந்­தா­லும் மலே­சியா புறப்­ப­டு­வ­தற்கு இரண்டு நாட்­க­ளுக்­குள் பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்­பது உறு­திப்­படுத்­தப்­பட வேண்­டும்.

கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமா­ன­நி­லை­யத்­தில் தரை­யி­றங்­கி­ய­தும் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள நீங்­கள் உங்­க­ளைப் பதிந்­து­கொண்டு அதற்­கான தொகை­யைச் செலுத்த வேண்­டும்.

குறு­கிய கால பய­ணம் மேற்­கொள்­வோர், இரு­வழி பய­ணச் சீட்டில் பய­ணம் மேற்­கொள்ள வேண்­டும். கொவிட்-19 தொடர்­பான சிகிச்­சை­க­ளுக்­காக குறைந்­த­பட்­சம் 100,000 ரிங்­கிட் ($32,500) பய­ணக் காப்­பு­றுதி கட்­டா­யம்.

தட­ம­றி­வ­தற்கு வச­தியாக MySejahtera செய­லியைப் பதி­விறக்­கம் செய்து அதில் உங்­க­ளைப் பதிந்­து­கொள்ள வேண்­டும்.

இந்­தப் பயண ஏற்­பாட்­டின்­கீழ், அன்­றா­டம் ஆறு விமா­னச் சேவை­கள் இரு வழி­க­ளி­லும் இடம்­பெ­றும்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், ஸ்கூட், ஏர்ஏஷியா, ஜெட்ஸ்­டார் ஏஷியா, மலே­சியா ஏர்­லைன்ஸ், மலிண்டோ ஏர் ஆகிய நிறு­வ­னங்­கள் விமா­னச் சேவையை வழங்­கும்.

மலே­சி­யா­வுக்குப் புறப்­ப­டும்­போது சாங்கி விமான நிலை­யத்­தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பயண பத்­தி­ரம், செல்­ல­ப­டி­யா­கக்­கூ­டிய தடுப்­பூசி சான்­றி­தழ், கொவிட்-19 பரிசோ­தனை முடிவு, MySejahtera செய­லி­யு­டன் கூடிய கைபேசி ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­க­ளி­டம் காட்ட வேண்­டும்.

கோலா­லம்­பூ­ரில் தரை­யி­றங்­கும்­போது கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

முடிவு வர 3 மணி நேரம் ஆக­லாம். அது வரை அங்கு காத்­திருக்­க­வேண்­டும். தொற்று இல்லை என்­றால் குடி­நு­ழைவு முகப்­புக்­குச் சென்று ஆவ­ணங்­க­ளைத் தாக்­கல் செய்­ய­வேண்­டும்.

மலே­சி­யா­வில் இருக்­கை­யில் பொதுச் சுகா­தார விதி­மு­றை­களைக் கடைப்­பி­டித்து நடக்­க­வேண்­டும். எப்­போ­துமே உங்கள் கைபேசியில் MySejahtera செயலி செயல்­படும் நிலை­யில் இருக்­க­வேண்­டும்.

கொவிட்-19 தொற்று ஏற்­பட்­டால் செலவை நீங்­கள்­தான் ஏற்­க­வேண்­டும். தொற்று விவ­ரங்­க­ளைச் செய­லி­யில் பதி­வேற்ற வேண்­டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.