ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென்னைத் தொடர்ந்து உலக அழகியாக கடந்த 2017ஆம் ஆண்டில் கிரீடம் சூட்டிக்கொண்ட மனுஷி சில்லர், தனது அழகுப் பராமரிப்பு குறித்தும் உடலைப் பேணும் ரகசியம் குறித்தும் இந்திய ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவம் பயின்றவரான மனுஷி, "எனக்கு சீஸ் கேக் மிகவும் பிடிக்கும். ஆனால், அதேவேளையில் கடினமாக உடற் பயிற்சியிலும் ஈடுபடுவேன்," என்கிறார்.
"சமூகம் ஒல்லியாக இருப்பதை உடற்கட்டுடன் இருப்பதற்கான அடையாளமாகப் பாராட்டக்கூடாது. ஏனெனில், இதில் உண்மைத் தன்மை இல்லை," என்கிறார்.
காலை உணவைத் தவிர்க்க கூடாது: காலை உணவைத் தவிர்ப்பது உடலின் வனப்பிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானது. அது நாளின் முடிவில் பசியை அதிகரித்து அதிகம் சாப்பிட வைத்துவிடும்.
சிறிய தட்டை பயன்படுத்துங் கள்: சிறிய தட்டை உபயோகிப்பது இயற்கையாகவே நம்மைக் குறை வாக சாப்பிடத் தூண்டும். இதனால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு உடல் எடை அதிகரித்துவிட்டதே எனக் கவலைப்படத் ேதவையிருக்காது.
சர்க்கரையைத் தவிருங்கள்: பழச்சாறுகளைக் குடிக்கும்போது அதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
நான் அதிகாலையில் எழுந்தவுடன் இரண்டு அல்லது மூன்று குவளை தண்ணீர் (சில சமயம் எலுமிச்சை சாறுடன்) குடிப்பேன்.
காலை உணவாக புளிப்பேறாத தயிருடன் ஓட்ஸ் அல்லது சோளம், கோதுமை ஃப்ளேக்ஸ், பழங்கள், இரண்டு அல்லது மூன்று முட்டையின் வெள்ளைக் கரு, அவகேடோ, கேரட் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எடுத்துக்கொள்வேன்.
இடைப்பட்ட நேரத்தில் இளநீர், பழங்களும் மதிய உணவாக சோறு, சப்பாத்தி, காய்கறி அல்லது கோழிக் கறி, பருப்புடன் சாப்பிடுவேன்.
மாலையில் வாழைப்பழம் அல்லது அத்திப்பழத்தை விதையுடன் அரைத்து ஸ்மூத்தி (பழச்சாறு), உப்பு சேர்க்காத முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட் உண்பேன்.
இரவு உணவாக வேகவைத்த காய்கறிகள் ப்ரோக்கோலி, கேரட், பீன்ஸ், காளான் சூப், மீன் அல்லது கோழிக் கறி எடுத்துக்கொள்வேன் என்கிறார் மனுஷி.
கட்டுடல் ரகசியம்:
குச்சிப்புடி நடனக்கலைஞரான மனுஷி விடுமுறை நாட்களில் பாரா க்ளைடிங், ஸ்கூபா டைவிங், ஃபங்கி ஜம்பிங் போன்ற சாகச விளையாட்டு களிலும் ஈடுபடுவாராம். தினமும் யோகா பயிற்சி, எட்டு மணி நேரம் தூக்கம், தூங்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பு கைபேசியை அடைத்து வைப்பதை பழக்கத்தில் கொண்டுள்ளார். உடல் வனப்புடன் இருக்க யோகா பயிற்சி பெரிதும் உதவுவதாகவும் கூறுகிறார்.
மனுஷி ஒரு நாளும் காலை உணவை தவிர்க்கவே மாட்டாராம். முடிந்தவரையில் சர்க்கரையை அறவே தவிர்த்துவிடும் இவர், வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். ஒருநாளைக்கு எட்டு குவளை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கால் தசைகளை வலுவாக்குவதற்காக தினமும் 'ஸ்குவாட்ஸ்' பயிற்சியையும் மேற்கொள்வதாகக் கூறுகிறார் உலக அழகி மனுஷி சில்லர்.
படம்: தமிழக ஊடகம்

