முதல்வர் யோகி: தேர்தலில் 325 இடங்களில் வெல்வோம்

1 mins read

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் அடுத்த ஆண்டு நடக்­கும் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் மொத்­த­முள்ள 403 இடங்­களில் பாஜக 325 இடங்­களில் வெற்றி பெறும் என அந்த மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் பேட்­டி­யில் கூறி­னார்.

"நாட்­டின் அதிக மக்­கள் தொகைக்கொண்ட மாநி­லத்­தில் பாஜக மீண்­டும் ஆட்­சிக்கு வரும். எங்­க­ளது மக்­கள் பணி­கள் மற்றும் சாத­னை­கள் கார­ண­மாக தேர்­தலில் அமோக வெற்­றி­யைப் பெற முடி­யும்.

"பாஜக மீண்­டும் மாநி­லத்­தில் ஆட்சி அமைக்­கும். அதில் எந்த சந்­தே­க­மும் வேண்­டாம்," என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

மாநிலத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் காட்டி யிருப்பதாகவும் அவர் கூறினார்.