திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா தாலுகா பிரிங்கரா பகுதி யைச் சேர்ந்த சந்தீப் குமார், 34, என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுச் செயலாளரை ஐவர் கும்பல் கத்தியால் 11 முறை கொடூரமாகக் குத்தி கொலை செய்தது.
இந்தச் சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் கிளப்பி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. கொலை தொடர்பில் கைதாகி உள்ள இரண்டு பேரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தங்கள் கட்சி நிர்வாகி சந்தீப்குமாரை ஆர்எஸ்எஸ் அமைப்பினரே கொலை செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

