4 அம்ச தீர்வுக்கு இந்தியா-இலங்கை இணக்கம்

1 mins read

புது­டெல்லி: இலங்­கை­யின் பொரு­ளி­யல் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண நான்கு அம்ச திட்­டம் ஒன்றை அம­லாக்க இந்­தி­யா­வும் இலங்­கை­யும் ஒப்­புக்­கொண்டன.

இலங்­கை­யின் நிதி அமைச்­சர் பாசில் ராஜ­பக்சே அண்­மை­யில் இரு நாள் பய­ணம் மேற்­கொண்டு புது­டெல்லி வந்­தி­ருந்­தார். அப்­போது இந்த இணக்­கம் ஏற்­பட்­டது.

உணவு, மருந்து, எரி­பொ­ருள் வாங்­கு­வ­தற்கு இந்­தியா இலங்­கைக்கு கடன் வழங்­கு­வது; இலங்­கை­யின் வர்த்­த­கப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க நாணய மாற்று உடன்­பாடு, திரி­கோ­ண­மலை எண்­ணெய் நிறு­வ­னங்­களை நவீ­ன­மயப் ­ப­டுத்­தும் திட்­டத்தை முன்­ன­தா­கவே நிறை­வேற்­று­வது; இலங்­கை­யில் பல்­வேறு துறை­களில் இந்­திய முத­லீடு இடம்­பெற கொழும்பு வழி­வகை­க­ளைச் செய்து கொடுப்­பது ஆகிய நான்­கும் அந்தத் திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்ள அம்­சங்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இரு தரப்­பும் ஏற்­றுக்­கொள்­கின்ற குறிப்­பிட்ட காலத்­திற்­குள் இந்­தத் திட்­டத்தை நிறை­வேற்ற வேண்­டும் என்ற இணக்­க­மும் ஏற்­பட்டு உள்­ள­தாக இந்­தி­யா­வில் இருக்­கும் இலங்கை தூத­ர­கம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

இந்­தி­யாவின் வெளி­யுறவு அமைச்­சர் ஜெய்­சங்­க­ரை­யும் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னை­யும் இலங்கை அமைச்­சர் புதுடெல்லி யில் சந்­தித்­தார்.

இந்­திய அற­நி­று­வ­னம் என்ற அமைப்­பின் ஏற்­பாட்­டில் அபு­தா­பி­யில் இந்­தி­யப் பெருங்­க­டல் வட்­டார மாநாடு என்ற ஒரு கூட்­டம் இன்று தொடங்­கு­கிறது. அதை இந்­திய அமைச்­சர் ஜெய்­சங்­க­ரும் இலங்கை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வும் தொடங்­கி­வைப்­பர்.