வெஸ்ட் ஹேமின் மிரட்டல்

வெஸ்ட் ஹேமின் மிரட்டல்

1 mins read
a3c929cb-08f4-4497-a97a-7771c9bc50c9
செல்சிக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் கோல் போட்ட பிறகு கொண்டாடும் வெஸ்ட் ஹேம் யுனைடெட் வீரர்கள். இவ்வாட்டத்தை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ள வெஸ்ட் ஹேம். படம்: இபிஏ -

பர்ன்லீ (இங்­கி­லாந்து): தொடர்ந்து சிறப்­பாக விளை­யா­டும் இலக்­கு­டன் கள­மி­றங்­கு­கிறது இது­வரை தனது ரசி­கர்­களை இன்ப அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யி­ருக்­கும் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்து அணி­யான வெஸ்ட் ஹேம் யுனை­டெட். எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மாறாக லீக் பட்­டி­ய­லில் தற்­போது நான்­கா­வது இடத்­தில் உள்ள வெஸ்ட் ஹேம் இன்று பர்ன்­லீ­யைச் சந்­திக்­க­வுள்­ளது.

லிவர்­பூல், செல்சி இரண்­டை­யும் வென்ற வெஸ்ட் ஹேமிற்­குத் தொடர்ந்து சிறப்­பாக ஆடு­வது ஒரு பிரச்­சி­னை­யாக இருந்­துள்­ளது. பெரிய அணி­களை வென்­றா­லும் சில வேளை­களில் சாதா­ர­ண­மான அணி­களை வெல்­லச் சிர­மப்­ப­டு­கிறது. அதை இன்று சரி­செய்­ய­வேண்­டும் வெஸ்ட் ஹேம்.

ஐரோப்­பிய சாம்பி­யன்ஸ் நடப்பு வெற்­றி­யா­ள­ரான செல்­சியை வென்ற வெஸ்ட் ஹேம், யூரோப்பா லீக்­கில் அடுத்த சுற்­றுக்­கும் முன்­னே­றி­விட்­டது. "ஐரோப்­பிய போட்டி­யில் நாங்­கள் விளை­யா­டிய விதத்தை நினைக்­கும்­போது நான் மிக­வும் உற்­சா­க­ம­டை­கி­றேன். அணி­யின் விளை­யாட்டு மிக­வும் சிறப்­பாக இருந்­துள்­ள­தால் நான் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன், ஏனென்­றால் இந்த அனு­ப­வம் எப்­படி இருக்­கும் என்­பதை என்­னால் கணிக்க முடி­யா­மல் இருந்­தது," என்று வெஸ்ட் ஹேம் நிர்­வாகி டேவிட் மோயெஸ் கூறியிருந்தார். காய­ம­டைந்­துள்ள வெஸ்ட் ஹேம் வீரர்­கள் கர்ட் சூமா, பென் ஜான்­சன் இரு­வ­ரும் இன்­றைய ஆட்­டத்­தில் இடம்­பெ­ற­மாட்­டார்­கள்.

இதற்­கி­டையே, பிரிட்­ட­னில் ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தால் சில கட்­டுப்­பா­டு­கள் சற்று முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் அல்­லது கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­ததை உறுதி­செய்­வோர் மட்­டுமே விளை­யாட்டு அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர்.