சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான சுசுகி கிண்ணப் போட்டியில் திமோர் லெஸ்டேயை 7-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது பிலிப்பீன்ஸ். 'ஏ' பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரிடம் தோல்வியடைந்த பிலிப்பீன்ஸ் இவ்வாட்டத்தில் அபாரமாக மீண்டுவந்தது.
இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆறு சுசுகி கிண்ணப் போட்டிகளில் ஐந்தாவது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிலிப்பீன்ஸ் தக்கவைத்துக்கொண்டது.

